Nikki Galrani & Aadhi : நடிகை நிக்கி கல்ராணிக்கு நடிகர் ஆதி கொடுத்த பர்த்டே சர்ப்ரைஸ்… வைரலாகும் வீடியோ!

  • January 4, 2024 / 01:58 PM IST

தமிழ் திரையுலகில் பிரபல நடிகையாக வலம் வருபவர் நிக்கி கல்ராணி. இவர் தமிழில் நடித்த முதல் படமே ஹாரர் ஜானர். அது தான் ‘டார்லிங்’. இந்த படத்தில் கதையின் நாயகனாக ஜி.வி.பிரகாஷ் குமார் நடித்திருந்தார். இப்படம் சூப்பர் ஹிட்டானதும், நிக்கி கல்ராணிக்கு அடித்தது ஜாக்பாட்.

அடுத்தடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் ‘யாகாவாராயினும் நா காக்க, கோ 2, வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன், கடவுள் இருக்கான் குமாரு, மொட்ட சிவா கெட்ட சிவா, மரகத நாணயம், நெருப்புடா, ஹர ஹர மஹாதேவகி, கலகலப்பு 2, பக்கா, சார்லி சாப்ளின் 2, கீ, ராஜவம்சம், இடியட்’ என படங்கள் குவிந்தது.

நிக்கி கல்ராணி தமிழ் மொழி படங்கள் மட்டுமின்றி மலையாளம், கன்னடம் மற்றும் தெலுங்கு ஆகிய மொழி படங்களிலும் வலம் வந்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கியிருக்கிறார். இப்போது இவர் நடிப்பில் ஒரு தமிழ் படம் மட்டும் இருக்கிறது.

2022-ஆம் ஆண்டு மே 18-ஆம் தேதி நிக்கி கல்ராணி பிரபல நடிகர் ஆதியை திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில், நேற்று (ஜனவரி 3-ஆம் தேதி) நிக்கி கல்ராணியின் பிறந்தநாள் என்பதால் ரசிகர்களும், திரையுலக பிரபலங்களும் இவருக்கு சமூக வலைத்தளத்தில் வாழ்த்து தெரிவித்தனர். தற்போது, இவரின் பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது எடுத்த வீடியோ மற்றும் ஸ்டில்ஸை ஆதி இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus