பாலிவுட் நடிகர் அமீர் கானுக்கு ‘கொரோனா’ பாதிப்பு… ஷாக் மோடில் ரசிகர்கள்!

பாலிவுட்டில் டாப் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் அமீர் கான். தற்போது, அமீர் கான் நடிக்கும் புதிய ஹிந்தி படம் ‘லால் சிங் சத்தா’. இந்த படத்தை அத்வைத் சந்தன் இயக்க, ஹீரோயினாக கரீனா கபூர் நடித்து கொண்டிருக்கிறார். இதன் ஷூட்டிங் ஜெட் ஸ்பீடில் நடைபெற்று வந்தது.

இந்த படத்தை இந்த ஆண்டு (2021) டிசம்பர் மாதம் ரிலீஸ் செய்ய ப்ளான் போட்டுள்ளனர். இந்நிலையில், இன்று நடிகர் அமீர் கான் தரப்பில் இருந்து ஒரு அறிக்கை வெளியாகியுள்ளது. அந்த அறிக்கையில் “கொரோனா டெஸ்ட் எடுத்தபோது நடிகர் அமீர் கானுக்கு ‘கொரோனா’ தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

அவர் தனது வீட்டிலையே தனிமைப் படுத்திக் கொண்டு, உரிய சிகிச்சை எடுத்துக் கொண்டு வருகிறார். யாரெல்லாம் கடந்த சில நாட்களாக அவருடன் தொடர்பில் இருந்தீர்களோ, நீங்களும் டெஸ்ட் எடுத்துக் கொள்ளுங்கள்” என்று கூறப்பட்டுள்ளது. இந்த செய்தியை கேள்விப்பட்ட நடிகர் அமீர் கானின் ரசிகர்கள் ஷாக் மோடுக்கு ஆக்டிவேட் ஆகியுள்ளனர்.

Share.