அடேங்கப்பா… 6 நாட்களில் அமீர் கானின் ‘லால் சிங் சத்தா’ செய்த வசூல் இத்தனை கோடியா?

பாலிவுட்டில் டாப் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் அமீர் கான். இவர் நடிப்பில் உருவாகியுள்ள புதிய ஹிந்தி படம் ‘லால் சிங் சத்தா’. இப்படம் கடந்த ஆகஸ்ட் 11-ஆம் தேதி ஹிந்தி மொழி மட்டுமில்லாமல் தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளிலும் ரிலீஸானது.

இந்த படத்தை அத்வைத் சந்தன் இயக்க, ஹீரோயினாக கரீனா கபூர் நடித்துள்ளார். மேலும், மிக முக்கிய ரோல்களில் நாகசைத்தன்யா, மோனா சிங், மனவ் விஜ், ஆர்யா ஷர்மா ஆகியோர் நடித்துள்ளனர்.

இதில் கெஸ்ட் ரோலில் ஷாருக்கான் நடித்திருக்கிறார். தற்போது, இப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், கடந்த 6 நாட்களில் இந்த படம் உலக அளவில் ரூ.103 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

Share.