அமீர் கான் – கரீனா கபூர் ஜோடியாக நடித்துள்ள ‘லால் சிங் சத்தா’ எப்படி இருக்கு?… ட்விட்டர் விமர்சனம்!

பாலிவுட்டில் டாப் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் அமீர் கான். இவர் நடிப்பில் உருவாகியுள்ள புதிய ஹிந்தி படம் ‘லால் சிங் சத்தா’. இப்படம் இன்று (ஆகஸ்ட் 11-ஆம் தேதி) ஹிந்தி மொழி மட்டுமில்லாமல் தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளிலும் ரிலீஸாகியுள்ளது.

இந்த படத்தை அத்வைத் சந்தன் இயக்க, ஹீரோயினாக கரீனா கபூர் நடித்துள்ளார். மேலும், மிக முக்கிய ரோல்களில் நாகசைத்தன்யா, மோனா சிங், மனவ் விஜ், ஆர்யா ஷர்மா ஆகியோர் நடித்துள்ளனர்.

இதில் கெஸ்ட் ரோலில் ஷாருக்கான் நடித்திருக்கிறார். தற்போது, இப்படத்தை திரையரங்குகளில் பார்த்த ரசிகர்கள், படம் நன்றாக இருந்ததா? இல்லையா? என தங்களது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளனர்.

Share.