விஜய் டிவியில் ‘உலக நாயகன்’ கமல் ஹாசன் தொகுத்து வழங்கும் ‘பிக் பாஸ்’ ரியாலிட்டி ஷோவின் சீசன் 4 கடந்த அக்டோபர் 4-ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகத் துவங்கி உள்ளது. தொடர்ந்து 105 நாட்கள் நடைபெறவிருக்கும் இந்த நிகழ்ச்சியில் நடிகர் ரியோ ராஜ், நடிகை சனம் ஷெட்டி, நடிகை ரேகா, மாடல் பாலாஜி முருகதாஸ், செய்தி வாசிப்பாளர் அனிதா சம்பத், நடிகை ஷிவானி நாராயணன், நடிகர் ஜித்தன் ரமேஷ், பாடகர் வேல்முருகன், நடிகர் ஆரி, மாடல் சோமசேகர், நடிகை கேப்ரில்லா, விஜய் டிவி அறந்தாங்கி நிஷா, நடிகை ரம்யா பாண்டியன், நடிகை சம்யுக்தா கார்த்திக், நடிகர் சுரேஷ் சக்கரவர்த்தி, ‘சூப்பர் சிங்கர்’ ஆஜித் ஆகிய 16 பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
கடந்த அக்டோபர் 15-ஆம் தேதி பிக் பாஸ் வீட்டிற்குள் வைல்ட் கார்ட் மூலம் ‘விஜய் டிவி’ மற்றும் ‘ஜீ தமிழ்’ மூலம் ஃபேமஸான தொகுப்பாளினி அர்ச்சனா என்ட்ரியானார். அதன் பிறகு ரேகா மற்றும் வேல்முருகன் எலிமினேட் செய்யப்பட்டனர். பின், வீட்டிற்குள் வைல்ட் கார்ட் மூலம் பிரபல ஆர்ஜேவும், பாடகியுமான சுசித்ரா என்ட்ரியானார். அதன் பிறகு சுரேஷ் சக்கரவர்த்தி, சுசித்ரா, சம்யுக்தா கார்த்திக், சனம் ஷெட்டி, ஜித்தன் ரமேஷ் மற்றும் அறந்தாங்கி நிஷா எலிமினேட் செய்யப்பட்டனர். நேற்றைய பிக் பாஸ் நிகழ்ச்சியில் அர்ச்சனா எலிமினேட் செய்யப்பட்டார்.
தற்போது, விஜய் டிவி தங்களது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் புதிய ப்ரோமோ வீடியோவை வெளியிட்டுள்ளது. இந்த ப்ரோமோ வீடியோவில் ‘மாட்டுனியா’ என்ற டாஸ்கின் போது ஆரியிடம் ஷிவானி நாராயணன் “யார் ரொம்ப demotivated-ஆ இருக்காங்க அப்படின்னு நீங்க நினைக்குறீங்க?” என்று கேட்கிறார். அதற்கு ஆரி “நான் அனிதாவை சொல்லுவேன். அவங்க படுத்து அழுதுட்டு இருக்கும்போது ஒரு விஷயம் சொன்னாங்க. என்ன பத்தி எங்க வீட்ல என்ன நினைப்பாங்கன்னு தெரில. எனக்கு வீட்டு நியாபகம் வந்திருச்சு.
பிரபா வந்து தெரிஞ்சுதான்” என்று பேசி முடிப்பதற்குள் அனிதா சம்பத் “ஆரி one second. என் அம்மா, அப்பா, பிரபாவை பற்றி என் family members-அ இழுத்து அவங்க பேரை சொல்லி பேசாதீங்க” என்று சொல்கிறார். பின், ஆரி “பேசி முடிச்சதுக்கு அப்புறம் தான் சொல்லணும்” என்று அனிதாவிடம் சொல்கிறார். அதற்கு அனிதா “அதுவரைக்கு என்னால வெயிட் பண்ண முடியாது” என்று சொல்கிறார். பின், ஆரி “அது உங்க இஷ்டம்” என்று சொல்கிறார். அதற்கு அனிதா “என் husband பற்றி நீங்க பேசாதீங்க. என்னால அதுவரைக்கும் வெயிட் பண்ண முடியாது. என் husband and அம்மா, அப்பா பற்றி stage-ல பேசாதீங்க” என்று கோபமாக கத்தி பேசுகிறார். பின், ஆரி “நீங்களும்” என்று சொல்லி முடிப்பதற்குள் அனிதா “பேசாதீங்க ஆரி” என்று கோபமாக கத்தி சொல்கிறார். இவ்வீடியோ சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவி வருகிறது.