விஜய் டிவியில் ‘உலக நாயகன்’ கமல் ஹாசன் தொகுத்து வழங்கும் ‘பிக் பாஸ்’ ரியாலிட்டி ஷோவின் சீசன் 4 கடந்த அக்டோபர் 4-ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகத் துவங்கி உள்ளது. தொடர்ந்து 105 நாட்கள் நடைபெறவிருக்கும் இந்த நிகழ்ச்சியில் நடிகர் ரியோ ராஜ், நடிகை சனம் ஷெட்டி, நடிகை ரேகா, மாடல் பாலாஜி முருகதாஸ், செய்தி வாசிப்பாளர் அனிதா சம்பத், நடிகை ஷிவானி நாராயணன், நடிகர் ஜித்தன் ரமேஷ், பாடகர் வேல்முருகன், நடிகர் ஆரி, மாடல் சோமசேகர், நடிகை கேப்ரில்லா, விஜய் டிவி அறந்தாங்கி நிஷா, நடிகை ரம்யா பாண்டியன், நடிகை சம்யுக்தா கார்த்திக், நடிகர் சுரேஷ் சக்கரவர்த்தி, ‘சூப்பர் சிங்கர்’ ஆஜித் ஆகிய 16 பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
கடந்த அக்டோபர் 15-ஆம் தேதி பிக் பாஸ் வீட்டிற்குள் வைல்ட் கார்ட் மூலம் ‘விஜய் டிவி’ மற்றும் ‘ஜீ தமிழ்’ மூலம் ஃபேமஸான தொகுப்பாளினி அர்ச்சனா என்ட்ரியானார். அதன் பிறகு ரேகா மற்றும் வேல்முருகன் எலிமினேட் செய்யப்பட்டனர். பின், வீட்டிற்குள் வைல்ட் கார்ட் மூலம் பிரபல ஆர்ஜேவும், பாடகியுமான சுசித்ரா என்ட்ரியானார். அதன் பிறகு சுரேஷ் சக்கரவர்த்தி, சுசித்ரா, சம்யுக்தா கார்த்திக், சனம் ஷெட்டி, ஜித்தன் ரமேஷ் மற்றும் அறந்தாங்கி நிஷா எலிமினேட் செய்யப்பட்டனர்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை பிக் பாஸ் நிகழ்ச்சியில் அர்ச்சனா எலிமினேட் செய்யப்பட்டார். தற்போது, விஜய் டிவி தங்களது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் புதிய ப்ரோமோ வீடியோவை வெளியிட்டுள்ளது. இந்த ப்ரோமோ வீடியோவில் ஹவுஸ்மேட்ஸ் முன்னிலையில் ஆரி “சுவாரஸ்யமும், ஈடுபாடும் இல்லாதபோது அவர் காரணம். அவர் நிறைய பிரச்சனைல இருந்தாரு இந்த வாரம் அப்படின்னு சொன்னாரு ஒரு விஷயம்” என்று சொல்கிறார்.
அதற்கு ரியோ ராஜ் “இல்ல அப்படி சொல்லலையே நான். too many questions. too many arguments. இந்த ரெண்டு வார்த்தை தான் use பண்ணேன்” என்று சொல்கிறார். அதன் பிறகு ஆரி, ஹவுஸ்மேட்ஸ் முன்னிலையில் நிற்கும் ரியோ ராஜிடம் “இங்க நான் பேசும்போது,அவங்க பதில் பேசினாலும் அது வந்து argument-ஏ தவிர அது இல்ல. groupism விஷயம் தனித்தன்மையோட விளையாடணும். உங்க கருத்துக்களை தெளிவா எடுத்து வைக்கணும்ங்குறது தான் இது” என்று சொல்கிறார். அதற்கு ரியோ “groupism-ன்னு ஏன் சொன்னீங்க?” என்று கேட்கிறார்.
பின், ஆரி “அந்த இதுல சொல்லியிருந்ததை சொன்னேன்” என்று சொல்கிறார். அதற்கு ரியோ “அதுல groupism-ன்னு போட்டிருக்கா?” என்று கேட்கிறார். பின், ஆரி “அதுல நீங்க பாருங்க. எடுத்து பாருங்க. தனியா விளையாடுங்கன்னு சொல்லியிருந்ததை தான் நான் சொல்றேன்” என்று சொல்கிறார். அதற்கு ரியோ “அதுல groupism-ன்னு போடலையே?” என்று கேட்கிறார். பின், ஆரி “கூட்டமா சேர்ந்து விளையாடாதீங்க. அப்படின்னு இருக்கு. அதுக்கு அது தான் english-ல அர்த்தம்னு நான் நினைக்கிறன்” என்று சொல்கிறார். இவ்வீடியோ சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவி வருகிறது.
#Day81 #Promo3 of #BiggBossTamil #பிக்பாஸ் – தினமும் இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BBTamilSeason4 #BiggBossTamil4 #VijayTelevision pic.twitter.com/LWYjV3xnuh
— Vijay Television (@vijaytelevision) December 24, 2020