“இதுதான் ரம்யாகிட்ட பிரச்சனை”ன்னு சொன்ன ஆரி… ‘பிக் பாஸ் 4’ புது ப்ரோமோ!
January 8, 2021 / 01:11 PM IST
|Follow Us
விஜய் டிவியில் ‘உலக நாயகன்’ கமல் ஹாசன் தொகுத்து வழங்கும் ‘பிக் பாஸ்’ ரியாலிட்டி ஷோவின் சீசன் 4 கடந்த ஆண்டு (2020) அக்டோபர் 4-ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகத் துவங்கி உள்ளது. தொடர்ந்து 105 நாட்கள் நடைபெறவிருக்கும் இந்த நிகழ்ச்சியில் நடிகர் ரியோ ராஜ், நடிகை சனம் ஷெட்டி, நடிகை ரேகா, மாடல் பாலாஜி முருகதாஸ், செய்தி வாசிப்பாளர் அனிதா சம்பத், நடிகை ஷிவானி நாராயணன், நடிகர் ஜித்தன் ரமேஷ், பாடகர் வேல்முருகன், நடிகர் ஆரி, மாடல் சோமசேகர், நடிகை கேப்ரில்லா, விஜய் டிவி அறந்தாங்கி நிஷா, நடிகை ரம்யா பாண்டியன், நடிகை சம்யுக்தா கார்த்திக், நடிகர் சுரேஷ் சக்கரவர்த்தி, ‘சூப்பர் சிங்கர்’ ஆஜித் ஆகிய 16 பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
கடந்த ஆண்டு அக்டோபர் 15-ஆம் தேதி பிக் பாஸ் வீட்டிற்குள் வைல்ட் கார்ட் மூலம் ‘விஜய் டிவி’ மற்றும் ‘ஜீ தமிழ்’ மூலம் ஃபேமஸான தொகுப்பாளினி அர்ச்சனா என்ட்ரியானார். அதன் பிறகு ரேகா மற்றும் வேல்முருகன் எலிமினேட் செய்யப்பட்டனர். பின், வீட்டிற்குள் வைல்ட் கார்ட் மூலம் பிரபல ஆர்ஜேவும், பாடகியுமான சுசித்ரா என்ட்ரியானார். அதன் பிறகு சுரேஷ் சக்கரவர்த்தி, சுசித்ரா, சம்யுக்தா கார்த்திக், சனம் ஷெட்டி, ஜித்தன் ரமேஷ், அறந்தாங்கி நிஷா மற்றும் அர்ச்சனா எலிமினேட் செய்யப்பட்டனர். கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை அனிதா சம்பத் எலிமினேட் செய்யப்பட்டார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஆஜித் எலிமினேட் செய்யப்பட்டார். தற்போது, விஜய் டிவி தங்களது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் புதிய ப்ரோமோ வீடியோவை வெளியிட்டுள்ளது. இந்த ப்ரோமோ வீடியோவில் டாஸ்கின் போது ஆரி “ரம்யா வந்து நேத்து ஒரு விஷயம் சொன்னாங்க. safe game-ங்குறத வந்து நான் தான் இங்க” என்று சொல்லி முடிப்பதற்குள் ரம்யா பாண்டியன் “safe game-ன்னு நான் சொல்லல. one side-ன்னு சொன்னேன்” என்று சொல்கிறார். பின், ஆரி “one side and safe game-ன்னு நீங்க அங்கயும் சொன்னீங்க ஒரு விஷயம்” என்று சொல்கிறார்.
அதற்கு ரம்யா “நேத்து நான் சொன்னது one sided தான் safe game சொல்லல” என்று சொல்கிறார். பின், ஆரி “நான் பேசி முடிக்கும்போது நீங்க பேசக் கூடாதுன்னு நினைக்குறேன். அது தான் rule-லையும் இருக்கு. தயவு செஞ்சு follow பண்ணுனீங்கன்னா நல்லா இருக்கும். நான் எனக்கு சொல்லும்போது ஒருத்தர்கிட்ட கூட நான் அந்த பதில் திரும்ப பேசவே இல்ல அங்கிருந்து. இதுதான் பிரச்சனை. உங்ககிட்ட குறை சொல்லும்போது அதை முதல்ல receive பண்ணிக்குற பக்குவம் இருந்துச்சுனாலே போதும்” என்று சொல்கிறார். இவ்வீடியோ சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவி வருகிறது.