இன்னும் நடிகர் ஆர்யாவை மறக்கவில்லையா நடிகை அபர்நிதி!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கும் ஆர்யா சமீபத்தில் நடிகை சாயிஷாவை திருமணம் செய்து கொண்டார்.

இந்த திருமணம் நடப்பதற்கு முன்பு ஆர்யாவுக்கு பெண் பார்ப்பதற்கு என்றே தனி நிகழ்ச்சி ஒன்று தொலைக்காட்சியில் நடத்தப்பட்டது. இதில் பலரும் கலந்து கொண்டு ஆர்யாவை திருமணம் செய்து கொள்ள போட்டியிட்டு கொண்டார்கள்.

இதில் கலந்து கொண்ட பலரும் தற்போது பிரபலங்களாக மாறி மக்களிடையே தங்களுக்கென ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ளார்கள். இதில் கலந்து கொண்ட ஒருவர் தான் தற்போது ஜெயில் படத்தில் ஜிவி பிரகாஷ்குமார் உடன் இணைந்து நடித்துக் கொண்டிருக்கும் நடிகை அபர்நிதி.

இந்த நிகழ்ச்சியில் இருக்கும்போது ஆர்யாவை மிகத் தீவிரமாக காதலித்து வந்த இவர், இன்றுவரை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அபர்நிதி ஆர்யா என்றுதான் குறிப்பிட்டிருக்கிறார். ஆர்யாவுக்கு ஏற்கனவே திருமணம் நடந்திருந்தும் இப்படி அவர் குறிப்பிட்டுள்ளது தற்போது சர்ச்சையை எழுப்பியுள்ளது. இது குறித்து எந்தவித கவலையுமின்றி அபர்நிதி அவரது பெயரை தன் கணவர் பெயர் போல குறிப்பிட்டுள்ளார்.

https://www.instagram.com/p/CFuJJ3chN8O/?igshid=1fp5afn3cwdeb

Share.