அப்பாஸ் நடிக்க வேண்டிய படத்தில் நடித்து சூப்பர் ஹிட் கொடுத்த விஜய் !

  • January 3, 2023 / 09:41 AM IST

தமிழ் சினிமாவில் சாக்லேட் பாய் நடிகராக வலம் வந்தவர் அப்பாஸ். இந்நிலையில் நடிகர் அப்பாஸ் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவது போன்ற புகைப்படம் வைரலாகி வருகிறது .

1996ம் ஆண்டு வெளியான ’காதல் தேசம்’ என்ற திரைப்படத்தின் மூலம் நடிகராக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் அப்பாஸ். அதன்பின் சுயம்வரம் , படையப்பா , மலபார் போலீஸ் ’ உள்பட பல திரைப்படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களின் நெஞ்சங்களில் இடம் பிடித்தார் . சமீப காலமாக இவர் சினிமாவில் இருந்து ஒதுங்கி உள்ளார் .

இந்த நிலையில் நடிகர் அப்பாஸ் தற்போது பேட்டி ஒன்றில் சுவாரசியமான தகவலை பகிர்ந்து உள்ளார் . பாசில் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் 1997 -ஆம் ஆண்டு வெளியான காதலுக்கு மரியாதை . இயக்குநர் பாசில் முதலில் நடிகர் அப்பாஸை நடிக்க வைக்க முயன்றுள்ளார் ஆனால் கால்ஷீட் பிரச்சனையால் அவரால் காதலுக்கு மரியாதை படத்தில் நடிக்க முடியவில்லை என்று கூறியுள்ளார் .

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus