அஜித் குமாரை பின்பற்றும் மஞ்சு வாரியர் !

  • February 23, 2023 / 12:55 AM IST

நடிகர் அஜித் நடிப்பில் இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் வெளியான படம் துணிவு . நேர்கொண்ட பார்வை , வலிமை படத்திற்கு பிறகு மீண்டும் இந்த கூட்டணி இணைந்து இருந்தது . போனி கபூர் இந்த படத்தை தயாரித்து இருந்தார் . இசையமைப்பாளர் ஜிப்ரான் இந்த படத்திற்கு இசையமைத்து இருந்தார் . நடிகர் சமுத்திரக்கனி , நடிகை மஞ்சு வாரியர் இந்த படத்தில் முக்கியமான பாத்திரத்தில் நடித்து உள்ளனர் .

இந்நிலையில் துணிவு படத்தில் முக்கியமான பாத்திரத்தில் மஞ்சு வாரியர் இருந்தார் . துணிவு படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டது பற்றி என்று பேட்டியில் தெரிவித்து இருந்தார் . அதில் அசுரன் படத்திற்கு பிறகு நிறைய கதாபாத்திரம் தமிழில் எனக்கு வந்தது அது அனைத்தும் அசுரன் கதாபாத்திரம் மாதிரியே இருந்தது அதனால் தமிழில் நடிப்பதை தவிர்த்து வந்தேன் . துணிவு படத்தின் கதாபாத்திரம் முற்றிலும் வேறுபட்ட ஒரு பாத்திரம் அதனால் துணிவு படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டேன் என்று தெரிவித்து இருந்தார் மஞ்சு வாரியர்.

துணிவு படத்தில் நடித்த போது அஜித்துடன் நல்ல நட்பு மஞ்சு வாரியிருக்கு ஏற்பட்டு உள்ளது . படப்பிடிப்பின் இடைவேளையில் இருவரும் லாங் ட்ரிப் சென்று இருந்தனர். தற்போது மஞ்சு வாரியர் புதிய பைக் வாங்கி உள்ளார் . இது பற்றி தனது இன்ஸ்டாவில் பகிர்ந்து உள்ள அவர் தைரியத்தின் ஒரு சிறிய படி எப்போதும் தொடங்குவதற்கு ஒரு நல்ல இடம் என்று பதிவிட்டுள்ளார்

மேலும் நான் ஒரு நல்ல ரைடர் ஆவதற்கு முன் ஒரு வழி செல்ல வேண்டும், அதனால் நான் சாலையில் தடுமாறுவதை நீங்கள் பார்த்தால், தயவுசெய்து என்னுடன் பொறுமையாக இருங்கள் .
என்னைப் போன்ற பலருக்கு உத்வேகமாக இருந்ததற்கு நன்றி அஜித் ஜி என்று தெரிவித்துள்ளார் .

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus