வைரலாகும் அஜித்தின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்

  • June 9, 2022 / 11:00 AM IST

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் நடிகர் அஜித் குமார் . இவர் நடிப்பில் கடைசியாக வெளியான படம் வலிமை . இந்த படத்தை இயக்கியவர் ஹச்.வினோத் . அதனை தொடர்ந்து நடிகர் அஜித் மீண்டும் ஹச். வினோத் இயக்கத்தில் நடித்து வருகிறார் . இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்து கொண்டிருக்கிறார் . நடிகை மஞ்சு மேலும் அஜித் அதனை தொடர்ந்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ஒரு படம் நடிக்க உள்ளார் . அந்த படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்க உள்ளது .

இந்நிலையில் நடிகர் அஜித் நடிக்கும் அவரது 61-வது படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாதில் நடந்து வருகிறது . இந்த படத்தின் கதை வங்கி கொள்ளையை மையமாக வைத்து எழுதப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது . தற்பொழுது இந்த படத்திற்காக ஒன்பது ஏக்கரில் வங்கி செட் போடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது .

இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவாக நடந்து கொண்டு இருக்கிறது . வருகின்ற தீபாவளிக்கு இந்த படம் வெளியாக அதிக வாய்ப்பு இருக்கிறது என்கிற தகவலும் வெளியாகி இருந்தது . பொதுவாக நடிகர் அஜித்தின் படங்களின் தலைப்பு அனைத்தும் ” V ” என்ற தலைப்பில் தான் இருக்கும் . அந்த வகையில் அஜித் நடித்து வரும் அவரது 61-வது படத்திற்கு வீரா என்று தலைப்பு வைக்க உள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது .

இந்நிலையில் நடிகர் அஜித் விமானத்தில் இருக்கும் புகைப்படங்கள் வெளியாகி இணையத்தில் வேகமாக பரவி வருகிறது .அஜித் ரசிகர்கள் பலரும் அந்த புகைப்படங்களை ட்ரெண்ட் செய்து வருகின்றனர்
.

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus