நடிகர் அஜித்தின் பாங்க்காக் ட்ரிப் புகைப்படங்களை பகிர்ந்த பி.ஆர். டீம் !

  • October 13, 2022 / 09:30 PM IST

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் நடிகர் அஜித் குமார் . இவர் நடிப்பில் கடைசியாக வெளியான படம் வலிமை . இந்த படத்தை இயக்கியவர் ஹச்.வினோத் . இந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை . அதனை தொடர்ந்து நடிகர் அஜித் மீண்டும் ஹச். வினோத் இயக்கத்தில் நடித்து வருகிறார் . இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்து கொண்டிருக்கிறார் . மேலும் அஜித் அதனை தொடர்ந்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ஒரு படம் நடிக்க உள்ளார் . அந்த படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்க உள்ளது .

இந்நிலையில் நடிகர் அஜித் நடிக்கும் அவரது 61-வது படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாதில் நடந்து முடிந்து உள்ளது . இந்த படத்தின் கதை வங்கி கொள்ளையை மையமாக வைத்து எழுதப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது . மேலும் இந்த படத்திற்காக ஒன்பது ஏக்கரில் வங்கி செட் போடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது . ஆக்‌ஷன் காட்சிகள் மிகவும் சிறப்பாக வந்துள்ளது என்ற தகவல் வெளியாகி உள்ளது


இந்நிலையில் அஜித்தின் 61 வது படத்தின் தலைப்பு ” துணிவு ” என்று படக்குழு அறிவித்து இருந்தது .இதனை தொடர்ந்து அஜித் ரசிகர்கள் பலரும் உற்சாகத்தில் இருந்தனர் . இந்நிலையில் நடிகர் அஜித் நடித்து வந்த தற்போது துணிவு படத்தின் படப்பிடிப்பு இன்றுடன் ( அக்டோபர் 11 ) முடிகிறது என்ற தகவல் வெளியாகி உள்ளது .

இந்நிலையில் துணிவு படம் 2023 பொங்கல் தினத்தில் வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது . ஏற்கனவே 2023 பொங்கல் தினத்தில் நடிகர் விஜய்யின் வாரிசு படம் வெளியாக உள்ளது என்று வாரிசு படக்குழு அறிவித்து இருந்தது . எனவே நடிகர் விஜய் மற்றும் அஜித் படங்கள் 2014 ஆம் ஆண்டுக்கு பிறகு ஒரே நாளில் வெளியாகும் சூழல் ஏற்பட்டுள்ளது . இதனால் இரண்டு நடிகர்களின் ரசிகர்களும் உற்சாகத்தில் உள்ளனர் .

இந்நிலையில் தற்போது நடிகர் அஜித் பாங்க்காக் ட்ரிப் சென்றபோது எடுத்த புகைப்படங்களை பி.ஆர். டீம் பகிர்ந்து உள்ளது . தற்போது இந்த படங்களை சமூக வலைதளத்தில் ரசிகர்களால் அதிகம் பகிரப்படுகிறது .

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus