நடிகர் அஜித் அஜித்தின் வாட்ஸ்அப் டி.பியை பாத்தீங்களா ?

  • October 8, 2022 / 06:05 PM IST

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் நடிகர் அஜித் குமார் . இவர் நடிப்பில் கடைசியாக வெளியான படம் வலிமை . இந்த படத்தை இயக்கியவர் ஹச்.வினோத் . இந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை . அதனை தொடர்ந்து நடிகர் அஜித் மீண்டும் ஹச். வினோத் இயக்கத்தில் நடித்து வருகிறார் . இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்து கொண்டிருக்கிறார் . மேலும் அஜித் அதனை தொடர்ந்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ஒரு படம் நடிக்க உள்ளார் . அந்த படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்க உள்ளது .

இந்நிலையில் நடிகர் அஜித் நடிக்கும் அவரது 61-வது படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாதில் நடந்து முடிந்து உள்ளது . இந்த படத்தின் கதை வங்கி கொள்ளையை மையமாக வைத்து எழுதப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது . மேலும் இந்த படத்திற்காக ஒன்பது ஏக்கரில் வங்கி செட் போடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது . ஆக்‌ஷன் காட்சிகள் மிகவும் சிறப்பாக வந்துள்ளது என்ற தகவல் வெளியாகி உள்ளது

இந்நிலையில் அஜித்தின் 61வது படத்தின் தலைப்பு ” துணிவு ” என்று படக்குழு அறிவித்து இருந்தது .இதனை தொடர்ந்து அஜித் ரசிகர்கள் பலரும் உற்சாகத்தில் இருந்தனர் . இந்நிலையில் நடிகர் அஜித் தற்போது துணிவு படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பில் உள்ளார்

இந்நிலையில் துணிவு படத்தின் டிஜிட்டல் உரிமத்தை நெட்பிலிக்ஸ் வாங்கி உள்ளது என்ற தகவல் வெளியாகி இருந்தது .இந்நிலையில் தற்போது துணிவு படத்தில் பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான நடிகை பாவனி நடித்து வருகிறார் என்ற செய்தி வெளியாகி இருந்தது அதன் பிறகு நடிகர் அஜித்துடன் நடிகை பாவனி மற்றும் பிக் பாஸ் புகழ் அமீர் செல்ஃபி எடுத்துள்ளனர் தற்போது இந்த புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வந்தது இந்நிலையில் தற்போது நடிகர் அஜித் அவர்களின் வாட்ஸ் அப் டி.பி ரசிகர்களிடம் லீக் ஆகி வைரலாகி வருகிறது .

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus