நயன்தாராவைப் பற்றி தல அஜித்தின் ஜென்டில்மேன் கமெண்ட்!

  • September 21, 2020 / 12:13 PM IST

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தல அஜித். இவர் நடிப்பில் தற்போது வலிமை எனும் படம் உருவாகி வருகிறது.

இந்நிலையில் அவ்வப்போது இவரின் பழைய புகைப்படங்கள் வீடியோக்கள் என்று ஏதேனும் ஒன்றை இவரது ரசிகர்கள் வெளியிட்டு தங்களது அன்பை வெளிப்படுத்தி வருகிறார்கள்.

இந்நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் நடிகர் அஜித் நயன்தாராவை பற்றி கூறிய ஒரு கமெண்ட் பற்றி தற்போது செய்தி வெளியாகியுள்ளது.

நடிகை நயன்தாரா ஆரம்பகாலங்களில் மிகவும் கவர்ச்சியாக நடித்து வந்தார் என்பது அனைவருக்குமே தெரிந்த விஷயம். அஜித் நடிப்பில் வெளியான பில்லா திரைப்படத்தில் நீச்சலுடையில் நயன்தாரா நடித்திருந்தார்.

இந்த உடையில் பார்த்து நயன்தாராவை நீங்கள் ரசித்தீர்களா என்று ஏடாகூடமாக ஒரு நிருபர் கேட்ட கேள்விக்கு மிகவும் ஜென்டில்மேனாக நடிகர் அஜித் அவர் அவரது வேலையை சிறப்பாக செய்துள்ளார் அதை நான் பாராட்டுகிறேன் என்று கூறியிருக்கிறார்.

எப்படியாவது ஒரு பதிலில் அவரை மாட்டிவிட வேண்டும் என்று நினைத்த நிருபருக்கு இது செம மொக்கையாக இருந்ததாம். மேலும் இந்த பதில் மூலம் அஜித் எவ்வளவு ஜென்டில்மேன் என்பது அனைவருக்கும் தெளிவாக தெரிகிறது.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus