மேடையில் நடனமாடிய தல அஜித்- வைரலாகும் ரேர் வீடியோ!

  • July 31, 2020 / 02:15 PM IST

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவரான நடிகர் அஜித்குமார் படங்களில் நடிப்பதோடு சரி, எந்த ஒரு மேடை நிகழ்ச்சிகளிலும் பொது நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ள மாட்டார் என்பது அனைவருக்குமே தெரிந்த விஷயம்.

லைம் லைட்டிலிருந்து விலகி இருக்கும் அஜித் ஆரம்ப காலத்தில் சில மேடை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். அப்படி அவர் கலந்துகொண்ட ஒரு நிகழ்ச்சியில் டான்ஸ் மாஸ்டர் ராஜுசுந்தரமுடன் ரசிகர்களின் வேண்டுகோளுக்கிணங்கி அஜித் நடனமாடியிருப்பார். இந்த வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

கடைசியாக அஜித் கலந்து கொண்ட மேடை நிகழ்ச்சி என்றால் அது முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதி அவர்களுடன் கலந்து கொண்ட மேடை நிகழ்ச்சி தான். இதற்குப் பின் இவர் எந்த மேடை நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ளவில்லை எந்த தொலைக்காட்சிகளுக்கும் பேட்டி கொடுப்பதும் இல்லை என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம்.

இவர் அனைத்து நிகழ்ச்சிகளிலிருந்தும் விலகியிருப்பதால் இவரது ரசிகர்கள் இவர் கலந்து கொண்ட பழைய மேடை நிகழ்ச்சி வீடியோக்களை அவ்வப்போது வெளியிட்டு நினைவுகூர்ந்து கொள்வார்கள். அந்த வகையில் தற்போது நடன கலைஞர்கள் மற்றும் ஸ்டண்ட் மாஸ்டர்கள் நிகழ்ச்சி ஒன்றில் சில வருடங்களுக்கு முன் அஜித் கலந்து கொண்ட வீடியோ வைரலாகியுள்ளது.

இந்த நிகழ்ச்சியில் பேசும்போது கூட நடிகர் அஜித், தான் எந்த மேடை நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்வதில்லை என்றும் நடனக்கலைஞர்களுக்காகவும் டெக்னீசியன்களுக்காகவும் மரியாதை செலுத்தும் விதமாகதான் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டதாகவும் குறிப்பிட்டிருப்பார்.

நடிகர்கள் எந்த படப்பிடிப்புக்கு சென்றாலும் அவர்களுக்கு பாதுகாப்பாக இருப்பது நடன கலைஞர்களும் ஸ்டன்ட் மாஸ்டர்களும்தான், அவர்களுக்காக இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வது தனக்கு பெருமையாக உள்ளது என்றும் கூறியிருப்பார்.

அவர் பேசிக் கொண்டிருக்கும் போது திடீரென பார்வையாளர்கள் அஜித்தை நடனம் ஆடும்படி கேட்டுக்கொண்டார்கள். உடனே மேடைக்கு வந்த ராஜசுந்தரம் மாஸ்டர் நடிகர் அஜித்துடன் சேர்ந்து சில ஸ்டெப்களை போட்டு நடனமாடியிருப்பார்கள். இந்த வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

ஒரு சில வினாடிகள் மட்டுமே நடனமாடிய அஜித் “இதற்கு மேல் நான் பந்தா காட்ட விரும்பவில்லை, இதுவே போதும்” என்று கூறி நடனத்தையும் தன் உரையையும் முடித்திருப்பார். தற்போது அஜித் ரசிகர்களிடையே இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

https://twitter.com/ThangamV19/status/1288512692706107392?s=19

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus