நடிகை அஞ்சலி இயக்குனர் விக்னேஷ் சிவன் படத்திற்கு டப்பிங் செய்துள்ளார். கொரோனா பொது முடக்கத்திலும் அஞ்சலி டப்பிங்கிற்கு ஒத்துழைப்பு அளித்துள்ளார்.
நடிகை அஞ்சலி இன்ஸ்டாகிராமில் ஒரு வீடியோவை வெளியிட்டிருந்தார் .அது தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது.
கொரோனா பொது முடக்கம் காரணமாக அத்தியாவசிய பணிகள் தவிர அனைத்து பணிகளும் நிறுத்தி வைக்கப்பட்டன. அதில் சினிமா படப்பிடிப்புகளும் ஒன்று. ஐந்தாம் கட்ட பொதுமுடக்கத்தை தொடர்ந்து சில தளர்வுகளை அரசு அறிவித்துள்ளது. அதனால் சில நிபந்தனைகள் மற்றும் கட்டுப்பாட்டுகளுடன் சீரியல் படப்பிடிப்புகளும் சினிமா போஸ்ட் புரொடக்ஷன் வேலைகளும் நடைபெற்று வருகிறது.
தமிழில் முன்னணி நடிகைகளில் ஒருவரான அஞ்சலி, நிசப்தம் என்ற படத்தில் அனுஷ்கா ஷெட்டி, மாதவன் ஆகியோருடன் இணைந்து நடித்துள்ளார். இந்த படத்தில் போலீஸ் வேடத்தில் அவர் நடித்துள்ளார் எனவும் ,இது தனக்கு சினிமாவில் அடுத்த கட்டம் செல்வதற்கு வாய்ப்பளிக்கும் விதமாக நடித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் இயக்குனர் விக்னேஷ் சிவனுடன் வீடியோ காலில் ஒரு காட்சிக்கு தற்போது டப் செய்துள்ளார். அந்த வீடியோவை அவர் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். அதை பார்த்த ரசிகர்கள் இது எந்த படம் என்றும் விக்னேஷ் சிவன் உடன் ஏன் வீடியோவில் நயன்தாரா இல்லை என்றும் கேள்விகள் எழுப்பியுள்ளனர்.