அடுத்த படத்திற்கு நாள் குறித்த இயக்குனர் முத்தையா !

  • June 30, 2022 / 04:39 PM IST

நடிகர் கமல்ஹாசன் அவரது தயாரிப்பு நிறுவனமான ராஜ் கமல் பிலிம்ஸ் நிறுவனம் சார்பாக படங்களை தயாரித்து வருகிறார். அந்த வகையில் அவர் நடிகர் சிவகார்த்திகேயனை வைத்து ஒரு படம் ஒன்றை தயாரிப்பதாக தகவல் வெளியானது. இந்நிலையில் நடிகர் ஆர்யாவை வைத்து முத்தையா இயக்கத்தில் படம் ஒன்றினை‌ தயாரிக்க உள்ளதாக தகவல் வெளியானது. அதன் பின் ஆர்யாவிற்கும் ராஜ்கமல் நிறுவனத்துக்கும் ஏதோ மனஸ்தாபம் ஏற்பட்டுள்ளது என செய்திகள் வெளியாகி இருந்தது . இந்த காரணத்தினால் நடிகர் ஆர்யா இந்த படத்தில் இருந்து விலகி விட்டார் என்றும் செய்திகள் வெளியாகி இருந்தது .

இந்நிலையில் இயக்குனர் முத்தையாவும் ராஜ் கமல் பட நிறுவனத்திடமிருந்து விலகி விட்டார் என்று செய்தி பின்பு வெளியாகி இருக்கிறது . அந்த படத்தை தற்பொழுது அருண் விஜய் நடிப்பில் உருவாகி உள்ள யானை படத்தை தயாரித்த ட்ரம் ஸ்டிக் நிறுவனம் இந்த படத்தையும் தயாரிக்க உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது . நடிகர் ஆர்யா தான் இந்த படத்தில் நடிக்க உள்ளார்.

 


ஆர்யா – முத்தையா கூட்டணியில் உருவாகும் இந்த படத்தில் நடிகர் மம்முட்டி முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார் என்ற தகவல் சமீபத்தில் வெளியாகி இருக்கிறது. இதனால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்நிலையில் ஆர்யா- முத்தையா படத்தின் படப்பிடிப்பு ஜூலை மாதம் 15-ஆம் தேதி தொடங்க இருக்கிறது என்ற தகவல் வெளியாகி இருக்கிறது .

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus