நடிகர் ஆர்யா வெளியிட்ட ‘காட்டேரி’ திரைப்படத்தின் டிரைலர்!

  • December 18, 2020 / 05:41 AM IST

கே.இ.ஞானவேல் ராஜா மற்றும் எஸ்.ஆர்.பிரபு தயாரிப்பில் வைபவ் நடிப்பில் வெளிவரவிருக்கும் திரைப்படம் “காட்டேரி”. ஏப்ரல் மாதம் வெளியிடப்படவிருந்த இந்த திரைப்படம் கொரோனா லாக்டவுன் காரணமாக தள்ளிவைக்கப்பட்டிருந்தது.

எஸ்என் பிரசாத் இந்தப் படத்திற்கு இசையமைத்திருக்கிறார். பிஎஸ் வினோத் ஒளிப்பதிவில் இந்தப் படத்தின் காட்சிகளில் நடிகர் வைபவுடன் சோனம் பாஜ்வா, வரலட்சுமி சரத்குமார், ஆத்மிகா, மணலி ரதோர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.

இந்தப் படத்தை இயக்குனர் டீகே இயக்கி இருக்கிறார். பிரவீன்.கே.எல் இந்தப்படத்திற்கு எடிட்டிங் செய்துள்ளார். இந்த காமெடி ஹாரர் திரைப்படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரித்துள்ளது.

இந்த படத்தின் இயக்குனர் டீகே இதற்கு முன்னர் “யாமிருக்க பயமேன்” மற்றும் “கவலை வேண்டாம்” படங்களை இயக்கியிருக்கிறார். இந்தப்படத்தில் வைபவ் ஜோடியாக சோனம் பாஜ்வா நடித்துள்ளார்.

தற்போது இந்த படத்தின் டிரைலரை பிரபல நடிகர் ஆர்யா சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த டிரைலர் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus
Tags