நடிகை அசின் மகளின் வைரலாகும் க்யூட் புகைப்படங்கள்!

  • June 10, 2020 / 02:54 PM IST

பிரபல நடிகையான அசின் தனது மகள் ஆரின் ஷர்மாவின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார் .அது இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

மலையாளம்,தமிழ், தெலுங்கு ,இந்தி என்று பல மொழிகளில் நடித்து தனக்கென ஒரு அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டவர் நடிகை அசின் . தமிழில் விஜய் , அஜித் போன்ற டாப் ஸ்டார்களுடன் நடித்து ரசிகர்கள் மனதை கவர்ந்த இவர் , பாலிவுட்டிலும் கலக்கிக் கொண்டிருந்தார். கடந்த 2016 ம் ஆண்டு பிரபல தொழில் அதிபரான ராகுல் ஷர்மாவை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு 2017ஆம் ஆண்டு மகள் ஆரின் ஷர்மா பிறந்தார்.

இந்த லாக் டவுனில் ஆரின் ஷர்மா பிறந்தநாள் வீடியோ முதல் அவர் செய்யும் அன்றாட சிறுசிறு க்யூட் சேட்டைகளையும் அவரது திறமைகளையும் புகைப்படம் மூலம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அசின் வெளியிட்டு வருகிறார்.

அசின் மகள் ஆரின் சமைப்பது , அவர் வீட்டை சுத்தம் செய்வது போன்ற புகைப்படங்களையும் , அவர் புத்தகம் படிப்பதில் ஆர்வம் உள்ளவர் என்பதைக்காட்டும் புகைப்படங்களையும் அவர் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பதிவிட்டிருந்தார் .அவை இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus