‘கொரோனா’ தொற்றிலிருந்து மீண்ட நடிகர் அதர்வா… ட்விட்டரில் போட்ட பதிவு!

  • May 5, 2021 / 12:55 PM IST

சினிமாவில் பாப்புலர் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் அதர்வா. இப்போது, அதர்வா நடிப்பில் ‘தள்ளிப் போகாதே, குருதி ஆட்டம், ஒத்தைக்கு ஒத்த’ மற்றும் இயக்குநர் சாம் ஆண்டன் படம் என நான்கு படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. இதில் ‘தள்ளிப் போகாதே, குருதி ஆட்டம், ஒத்தைக்கு ஒத்த’ ஆகிய மூன்று படங்களும் ரிலீஸுக்கு தயாராக இருக்கிறது.

சாம் ஆண்டன் இயக்கும் படத்தில் அதர்வாவுக்கு ஜோடியாக தன்யா ரவிச்சந்திரன் நடித்துள்ளார். மேலும், அருண் பாண்டியன், ராகுல் தேஜ் ஷெட்டி, அழகம் பெருமாள், முனிஷ்காந்த், சின்னி ஜெயந்த், அறந்தாங்கி நிஷா ஆகியோர் முக்கிய ரோல்களில் நடித்துள்ளனர். ஆக்ஷன் த்ரில்லர் ஜானரில் உருவாகும் இந்த படத்தின் ஷூட்டிங் கடந்த ஏப்ரல் மாதம் 16-ஆம் தேதி முடிவடைந்தது. இதன் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் ஜெட் ஸ்பீடில் நடைபெற்று வருகிறது.

சமீபத்தில், அதர்வா தனது ட்விட்டர் பக்கத்தில் “கொரோனா டெஸ்ட் எடுத்தபோது எனக்கு ‘கொரோனா’ தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. நான் வீட்டிலையே தனிமைப் படுத்திக் கொண்டு, உரிய சிகிச்சை எடுத்துக் கொண்டு வருகிறேன்” என்று கூறியிருந்தார். இந்நிலையில், இன்று ‘கொரோனா’ டெஸ்ட் எடுத்தபோது நெகட்டிவ் என்று வந்துள்ளதாக அதர்வா கூறியுள்ளார்.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus