சினிமாவில் பாப்புலர் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் அதர்வா. இவர் நடிகர் முரளியின் மகனாக இருந்தும் திரையுலகில் தனக்கென ஒரு ஃபார்முலாவை பிடித்துக் கொண்டு தொடர்ந்து படங்களில் நடித்து கொண்டிருக்கிறார். இவருக்கு அமைந்த முதல் படத்திலேயே ஹீரோயின் சமந்தா தான். அது தான் ‘பாணா காத்தாடி’.
‘பாணா காத்தாடி’ படத்துக்கு பிறகு நடிகர் அதர்வாவுக்கு அடித்தது ஜாக்பாட். அடுத்தடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் ‘முப்பொழுதும் உன் கற்பனைகள், பரதேசி, இரும்பு குதிரை, சண்டி வீரன், ஈட்டி, கணிதன், ஜெமினி கணேசனும் சுருளி ராஜனும், செம போத ஆகாதே, இமைக்கா நொடிகள், பூமராங், 100, தள்ளிப் போகாதே, குருதி ஆட்டம், ட்ரிகர், பட்டத்து அரசன்’ என தமிழ் படங்கள் குவிந்தது.
இப்போது அதர்வா நடிப்பில் ‘நிறங்கள் மூன்று, அட்ரஸ், தணல்’ என மூன்று படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. இந்நிலையில், இவரின் சொத்து மதிப்பு ரூ.23 கோடி என தகவல் கிடைத்துள்ளது.