அதர்வாவுக்கு பிடித்த இசையமைப்பாளர் யார் தெரியுமா ?
September 18, 2022 / 07:40 PM IST
|Follow Us
அதர்வா முரளி தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர் ஆவார். நடிகர் முரளியின் மகனும் இயக்குனர் எஸ்.சித்தலிங்கய்யாவின் பேரனுமான அதர்வா தனது திரை வாழ்க்கையை பானா காத்தாடி (2010) மூலம் தொடங்கினார். மேலும் தமிழ் சினிமாவில் தலைசிறந்த இயக்குனர்களில் ஒருவரான பாலாவின் படமான பரதேசி (2013) படத்தில் நடித்து ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றார் .
பரதேசி படத்திற்கு முன் காதல் த்ரில்லர் படமான முப்பொழுதும் உன் கற்பனைகள் (2012) இல் மாயையால் அவதிப்படும் இளைஞனாக நடித்ததற்காக பாராட்டைப் பெற்றார். இயக்குனர் பாலாவின் தேயிலை தோட்டத்தில் அடிமையாக நடத்தப்பட்ட கிராமப்புற கிராமவாசியாக அவரது பாத்திரம் அவரது திரைப்பயணத்தில் திருப்புமுனை நடிப்பாக அமைந்தது இதற்காக அதர்வாவுக்கு தமிழில் சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருதைப் பெற்றுத் தந்தது.
அதர்வா நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் குருதி ஆட்டம். இந்த படத்தை ஸ்ரீ கணேஷ் இயக்கி இருந்தார் . ப்ரியா பவானி ஷங்கர் இந்த படத்தில் நாயகியாக நடித்து இருந்தார் . இந்த படம் அதர்வாவுக்கு வெற்றியை தரவில்லை . அதர்வா தற்போது அட்ரஸ் , ஒத்தைக்கு ஒத்த , ட்ரிக்கர் , நிறங்கள் மூன்று ஆகிய படங்களில் நடித்து வருகிறார் . இந்நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய அதர்வா தனக்கு மிகவும் பிடித்த இசையமைப்பாளர்
ஏ. ஆர். ரகுமான் என்று தெரிவித்துள்ளார் .
Pour jouer sans formalités lourdes, un casino sans kyc simplifie les démarches tout en gardant des paiements rapides et un support accessible.
Long-haul drivers can build genuine connections through shared interests and conversation on a trucker dating site, making it easier to meet someone who understands the road.