தமிழ் சினிமாவில் பாப்புலர் காமெடி நடிகர்களில் ஒருவராக வலம் வந்தவர் போண்டா மணி. இவர் ‘ரன், சுந்தரா டிராவல்ஸ், வின்னர், ஐயா, இங்கிலீஷ்காரன், மழை, ஆறு, வாத்தியார், மருதமலை, படிக்காதவன், வேலாயுதம், குசேலன், சாணக்யா, சத்ரபதி, ஒற்றன், திருமலை, வசீகரா’ போன்ற படங்களில் நடித்திருக்கிறார்.
போண்டா மணி இதுவரை 270 படங்களில் முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து நடித்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கியிருக்கிறார். இவருக்கு ஒரு மகளும், ஒரு மகனும் இருக்கின்றனர். சமீபத்தில், போண்டா மணியின் இரண்டு சிறுநீரகமும் செயலிழந்ததால் அதற்கான சிகிச்சை எடுத்து வந்தார்.
சிகிச்சைக்காக இவருக்கு சில பிரபல நடிகர்கள் பண உதவி செய்தனர். தற்போது, நடிகர் போண்டா மணி நேற்று இரவு அவரது வீட்டில் இருக்கும் போது உடல் நலக்குறைவு ஏற்பட்டு இயற்கை எய்தினார் என தகவல் கிடைத்துள்ளது. இவரது மறைவுக்கு திரையுலகினர் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.