தமிழ் சினிமாவில் பாப்புலர் நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் போஸ் வெங்கட். சன் டிவியில் ஒளிபரப்பான ‘மெட்டி ஒலி’ சீரியல் மூலம் ஃபேமஸான இவர் சினிமாவில் அறிமுகமான முதல் படம் ‘ஈரநிலம்’.
இந்த படத்துக்கு பிறகு நடிகர் போஸ் வெங்கட் ‘தலைநகரம், சிவாஜி, மருதமலை, சிங்கம், கோ, கவண், தீரன் அதிகாரம் ஒன்று, ரைட்டர், மாறன், டாணாக்காரன், யானை, அயோத்தி’ போன்ற பல படங்களில் நடித்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கினார்.
நடிகராக மட்டுமில்லாமல் போஸ் வெங்கட் இயக்குநராக களமிறங்கிய படம் ‘கன்னி மாடம்’. 2020-ஆம் ஆண்டு வெளியான இப்படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது.
நடிகர் போஸ் வெங்கட்டின் சகோதரி வளர்மதிக்கு நேற்று மாரடைப்பு ஏற்பட்டு காலமானார். இவரது இறுதி சடங்கில் கலந்துகொண்ட போஸ் வெங்கட்டின் சகோதரர் ரங்கநாதனும் மாரடைப்பால் உயிரிழந்து விட்டதாக தகவல் கிடைத்துள்ளது.