நடிகர் டேனியல் பாலாஜிக்கு ‘கொரோனா’ பாதிப்பு… மருத்துவமனையில் அனுமதி!

  • May 13, 2021 / 08:12 PM IST

சினிமாவில் பாப்புலர் நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் டேனியல் பாலாஜி. இவர் அறிமுகமான முதல் சீரியலிலேயே அதிக கவனம் ஈர்த்தார். அது தான் ‘சித்தி’ சீரியல். அதன் பிறகு ‘அலைகள்’ என்ற சீரியலில் நடித்தார். ‘அலைகள்’ சீரியலுக்கு பிறகு வெள்ளித்திரைக்குள் என்ட்ரியானார் டேனியல் பாலாஜி.

இவர் அறிமுகமான முதல் படம் ‘ஏப்ரல் மாதத்தில்’. இந்த படத்துக்கு பிறகு நடிகர் டேனியல் பாலாஜிக்கு அடித்தது ஜாக்பாட். அடுத்தடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் ‘காதல் கொண்டேன், காக்க காக்க, வேட்டையாடு விளையாடு, பொல்லாதவன், வை ராஜா வை, அச்சம் என்பது மடமையடா, பைரவா, மாயவன், வடசென்னை, பிகில்’ என தமிழ் படங்கள் குவிந்தது.

டேனியல் பாலாஜி தமிழ் மொழி படங்கள் மட்டுமில்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழி படங்களிலும் நடித்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கியிருக்கிறார். தற்போது, நடிகர் டேனியல் பாலாஜிக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இதனைத் தொடர்ந்து சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் அட்மிட் ஆகி சிகிச்சை பெற்று வருகிறாராம்.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus