வைரலாகும் தனுஷின் மாஸ் உடற்பயிற்சி வீடியோ!

  • June 22, 2020 / 04:27 PM IST

தமிழில் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவரான தனுஷ், 2002 ஆம் ஆண்டு “துள்ளுவதோ இளமை” படத்தின் மூலம் தமிழ்த் திரைப்படவுலகிற்கு அறிமுகமானார்.

இதைத் தொடர்ந்து எண்ணற்ற வெற்றிப்படங்களை கொடுத்த இவர், தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையே வைத்துள்ளார். இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் “பட்டாசு”. ஆர்.எஸ் துரை செந்தில்குமார் இயக்கத்தில் வெளிவந்த இந்தப் படம் கொரோனா லாக்டவுனிற்கு முன்னர் வெளியாகி அவரது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.

இதைத் தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் “ஜகமே தந்திரம்”படத்தில் நடித்துள்ளார். இந்தப் படம் லாக்டவுன் முடிந்ததும் வெளியிடப்படும் என்று திரைப்படக் குழு தெரிவித்துள்ளது.

இதைத்தொடர்ந்து மாரி செல்வராஜ் இயக்கத்தில் “கர்ணன்”என்ற படத்தில் நடிக்கவுள்ளார். மேலும் ஒரு இந்தி படத்தில் நடிக்கவும் ஒப்பந்தம் செய்துள்ளார்.

நடிப்பு மட்டுமல்லாது பாடகராகவும், இயக்குனராகவும்,தயாரிப்பாளராகவும், எழுத்தாளராகவும் பன்முகத் திறமைகளைக் கொண்ட தனுஷ், வொர்க்அவுட் செய்வது போன்ற வீடியோ ஒன்று தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இதை அவரது ரசிகர்கள் ஷேர் செய்து வருகிறார்கள். இந்த வீடியோ மாரி 2 படத்தின் பொழுது எடுக்கப்பட்டது போல காட்சியளிக்கிறது.

https://youtu.be/qjrwZR0IW9g

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus