தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவரான தனுஷ் நேற்று முன்தினம் தன் பிறந்தநாளை கொண்டாடினார். இவர் பிறந்தநாளன்று தனுஷ் ரசிகர்கள் இணையதளம் முழுவதும் இவரது புகைப்படங்கள், வீடியோக்கள் போன்றவற்றை வெளியிட்டு விமர்சையாக கொண்டாடினர்.
அதுமட்டுமின்றி தனுஷ் திரைப்படங்களின் பாடல்கள் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது. அவரது ரசிகர்கள் காமன் டிபி வெளியிட்டு தனுஷ் பிறந்தநாள் ஹாஸ்டேக்கை ட்ரண்டிங் செய்தனர். இந்நிலையில் தனது பிறந்தநாளை வெகுவிமர்சையாக கொண்டாடி தன்னை திக்குமுக்காடச் செய்த ரசிகர்களுக்கு தனது நன்றிகளை தெரிவித்து நெகழ்ச்சியான அறிக்கை ஒன்றை தனுஷ் தற்போது வெளியிட்டுள்ளார்.
இந்த அறிக்கையில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது “அனைத்து காமன் டிபிகள், மாஷ் அப்க்கள், மூன்று மாதங்களாக நீங்கள் செய்து வந்த கவுண்ட் டவுன் டிசைன்கள், அனைத்தையுமே என்னால் முடிந்தவரை பார்த்தேன், ரசித்தேன், மகிழ்ந்தேன். எனது ரசிகர்கள் அனைவருக்கும் மிக்க மிக்க நன்றி. அதையும் தாண்டி நீங்கள் செய்த அனைத்து நற்பணிகளையும் கண்டு நெகிழ்ந்து உங்களால் கர்வம் கொள்கிறேன், பெருமைப்படுகிறேன். உங்களுக்கு எப்படி நன்றி சொல்வது என்றே தெரியவில்லை, உங்கள் அன்பால் திக்குமுக்காடி போய் விட்டேன்” என்று நெகழ்ச்சியாக வெளியிட்டுள்ளார்.
மேலும் “எனக்கு தொலைபேசி வாயிலாகவும் பத்திரிக்கை மூலமாகவும் சமூக வலைத்தளங்கள் மூலமாகவும் வாழ்த்துக்களை தெரிவித்த திரைத்துறையினர், சமூக ஆர்வலர்கள், அரசியல் பிரபலங்கள், நண்பர்கள் மற்றும் பண்பலை ஊடகம் தொலைக்காட்சி அன்பர்களுக்கும் என் நலன் விரும்பிகளுக்கும் என் நெஞ்சார்ந்த வணக்கத்தையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என்றிருக்கிறார்.
https://twitter.com/dhanushkraja/status/1288495000775356417?s=19
இவ்வாறு தனுஷ் தனது அறிக்கையில் நெகிழ்ச்சியுடன் தனது ரசிகர்களுக்கு நன்றிகளைத் தெரிவித்துள்ளார்.