தமிழில் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவரான தனுஷ், 2002 ஆம் ஆண்டு “துள்ளுவதோ இளமை” படத்தின் மூலம் தமிழ்த் திரைப்படவுலகிற்கு அறிமுகமானார்.
இதைத் தொடர்ந்து எண்ணற்ற வெற்றிப்படங்களை கொடுத்த இவர், தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையே வைத்துள்ளார். இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் “பட்டாசு”. ஆர்.எஸ் துரை செந்தில்குமார் இயக்கத்தில் வெளிவந்த இந்தப் படம் கொரோனா லாக்டவுனிற்கு முன்னர் வெளியாகி அவரது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.
இதைத் தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் “ஜகமே தந்திரம்”படத்தில் நடித்துள்ளார். இந்தப் படம் லாக்டவுன் முடிந்ததும் வெளியிடப்படும் என்று திரைப்படக் குழு தெரிவித்துள்ளது. மேலும் மாரி செல்வராஜ் இயக்கத்தில் “கர்ணன்”என்ற படத்தில் நடிக்கவுள்ளார். இவை மட்டுமின்றி ஒரு இந்தி படத்தில் நடிக்கவும் ஒப்பந்தம் செய்துள்ளார்.
இந்த லாக்டவுன் நாட்களில் நடிகர்-நடிகைகள் என்ன செய்கிறார்கள் என்பதே வெளியே தெரியாத அளவிற்கு அனைவரும் தங்கள் வீடுகளுக்கு உள்ளேயே முடங்கியுள்ளார்கள். அவ்வப்போது நடிகைகள் தங்களது சோசியல் மீடியா பக்கத்தில் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்கள்.
ஆனால் நடிகர்களோ அதற்கான எந்த ஒரு அறிகுறியும் கொடுக்காமல் இருக்கிறார்கள். இந்நிலையில் தற்போது நடிகர் தனுஷ் தன் இரு மகன்களுடன் தனது லாக்டவுன் நேரத்தை கழித்து வருவது போன்ற க்யூட் புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இதன்மூலம் நடிகர் தனுஷ் இந்த லாக்டவுனில் தன் குடும்பத்துடன் நேரத்தை செலவிட்டு வருகிறார் என்பது தெரிகிறது. தற்போது தனுஷ் ரசிகர்கள் இந்த புகைப்படத்தை வைரலாக்கி வருகிறார்கள்.