நடிகர் தனுஷுக்கு வந்த சோதனை !

நடிகர் தனுஷ் துள்ளுவதோ இளமை என்கிற படம் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக 2002-ஆம் ஆண்டு அறிமுகம் ஆனார் . இவர் இயக்குனர் கஸ்தூரி ராஜாவின் மகன் . இவரது ஆரம்ப காலகட்டத்தில் இவரை பலர் விமிர்சித்தார்கள் . அவர் ஒல்லியாக இருப்பதை பலர் கிண்டலடித்தனர் .ஆனால் நடிகர் தனுஷ் தனது நடிப்பின் மூலம் அவர்களுக்கு பதில் அளிக்க தொடங்கினார். பொல்லாதவன் , திருவிளையாடல் ஆரம்பம் , யாரடி நீ மோகினி , ஆடுகளம் , என தொடர்ந்து பல வெற்றிப் படங்களை கொடுத்தார் . தமிழ் சினிமா மட்டுமில்லமல் , பாலிவுட் சினிமாவிலும் இவர் படங்களுக்கு வரவேற்பு இருந்தது . மேலும் பாடகர் , பாடலாசிரியர் , இயக்குனர் , தயாரிப்பாளர் என்று தன்னை மெருகேத்திக்கொண்டே இருக்கிறார் .

அந்த வகையில் இவர் “உந்தர் பார் ” என்கிற தயாரிப்பு நிறுவனம் ஒன்றை ஆரம்பித்தார் .அந்த நிறுவனம் மூலம் 3, எதிர்நீச்சல் , வடசென்னை , வேலை இல்லா பட்டதாரி ,போன்ற படங்களை தயாரித்து உள்ளார் தனுஷ் . இந்த தயாரிப்பு நிறுவனம் யூடிப் தொலைக்காட்சி ஒன்றையும் வைத்து இருந்தனர் . இதில் இவர்கள் தயாரித்த படத்தின் பாடல்கள் மற்றும் சில காட்சிகளை வெளியிட்டு வந்தனர் . இந்நிலையில் இந்த யூடிப் தொலைக்காட்சியை ஹாக்கர்ஸ் ஹேக் செய்துள்ளனர் . இதனால் அந்த யூடிப் தொலைக்காட்சியில் இருந்த அனைத்தும் அதில் இருந்து டெலிட் ஆகி உள்ளது . தற்பொழுது இதனை திரும்ப பெரும் முயற்சியில் தயாரிப்பு நிறுவனம் இறங்கி உள்ளது .

சமீபகாலமாக தமிழ் திரையுலகின் பல முன்னணி யூடிப் தொலைக்காட்சிகளை ஹேக்கர்கள் ஹேக் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

Share.