அடேங்கப்பா… நடிகரும், இயக்குநருமான சேரனின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா?
December 14, 2021 / 10:27 AM IST
|Follow Us
சினிமாவில் பாப்புலர் நடிகராகவும், இயக்குநராகவும் வலம் வருபவர் சேரன். சேரன் இயக்கிய முதல் படமே சூப்பர் ஹிட்டானது. அது தான் ‘பாரதி கண்ணம்மா’. அதன் பிறகு ‘பொற்காலம், தேசிய கீதம், வெற்றிக் கொடி கட்டு, பாண்டவர் பூமி’ போன்ற படங்களை இயக்கிய சேரனுக்கு, இயக்குநரும் – ஒளிப்பதிவாளருமான தங்கர் பச்சான் நடிக்கும் வாய்ப்பை வழங்கினார். அந்த படம் தான் ‘சொல்ல மறந்த கதை’.
‘சொல்ல மறந்த கதை’-க்கு பிறகு சேரன் இயக்கி, நடித்த படங்கள் ‘ஆட்டோகிராஃப், தவமாய் தவமிருந்து, மாயக்கண்ணாடி, பொக்கிஷம், திருமணம்’. அதன் பிறகு நடிகர் சேரனுக்கு அடித்தது ஜாக்பாட். அடுத்தடுத்து மற்ற இயக்குநர்களின் இயக்கத்தில் நடிக்க நடிகர் சேரனின் கால்ஷீட் டைரியில் ‘பிரிவோம் சந்திப்போம், ராமன் தேடிய சீதை, யுத்தம் செய், முரண், சென்னையில் ஒரு நாள், மூன்று பேர் மூன்று காதல், ராஜாவுக்கு செக்’ என படங்கள் குவிந்தது. பின், ‘பிக் பாஸ்’ எனும் ரியாலிட்டி ஷோவிலும் கலந்து கொண்டு ரசிகர்களின் லைக்ஸை குவித்தார் சேரன்.
செல்வராணி என்பவரை திருமணம் செய்து கொண்டார் சேரன். இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். இப்போது சேரன் ‘ஆனந்தம் விளையாடும் வீடு’ என்ற படத்தில் மிக முக்கிய ரோலில் நடித்துள்ளார். இதில் ஹீரோவாக கெளதம் கார்த்திக் நடித்துள்ளார். இந்த படத்தை இயக்குநர் நந்தா பெரியசாமி இயக்கியுள்ளார். இந்நிலையில், நடிகரும், இயக்குநருமான சேரனின் சொத்து மதிப்பு ரூ.15 கோடி என தகவல் கிடைத்துள்ளது.