சினிமாவில் பாப்புலர் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் பிரபு தேவா. நடன இயக்குநர், நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர் என எப்போதும் சினிமாவில் பிஸியாக பணியாற்றி வரும் பிரபு தேவா, நடிகராக அறிமுகமான முதல் படம் ‘இந்து’. அதன் பிறகு ஷங்கர் இயக்கிய ‘காதலன்’ படத்தில் ஹீரோவாக நடித்தார்.
‘காதலன்’ படத்தின் ஹிட்டிற்கு பிறகு நடிகர் பிரபு தேவாவுக்கு அடித்தது ஜாக்பாட். அடுத்தடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் ‘ராசய்யா, லவ் பேர்ட்ஸ், மின்சார கனவு, காதலா காதலா, வானத்தைப்போல, எங்கள் அண்ணா, தேவி, குலேபகாவலி, லக்ஷ்மி, பொன் மாணிக்கவேல், தேள்’ என படங்கள் குவிந்தது.
பிரபு தேவா ‘போக்கிரி, வில்லு, எங்கேயும் காதல், வெடி’ போன்ற தமிழ் படங்களையும், ஹிந்தி மற்றும் தெலுங்கு மொழியில் சில படங்களையும் இயக்கியிருக்கிறார். இப்போது பிரபு தேவா நடிப்பில் ‘எங் மங் சங், ஊமை விழிகள், பஹீரா, பொய்க்கால் குதிரை’ என நான்கு தமிழ் படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. இந்நிலையில், பிரபு தேவாவின் சொத்து மதிப்பு ரூ.145 கோடி என தகவல் கிடைத்துள்ளது.