மீண்டும் சமூக வலைத்தளத்தில் நடிகை திவ்யா ஸ்பந்தனா- உற்சாகத்தில் ரசிகர்கள்!
August 9, 2020 / 09:00 AM IST
|Follow Us
2003-ஆம் வருடம் வெளியான “அபி” எனும் கன்னட படம் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர் நடிகை திவ்யா ஸ்பந்தனா. இவர் தமிழில் 2004ஆம் வருடம் வெளியான “குத்து” என்ற படம் மூலம் ஹீரோயினாக தமிழ் திரையுலகில் வலம் வர தொடங்கினார்.
தமிழில் கிரி, பொல்லாதவன், தூண்டில், வாரணம் ஆயிரம், சிங்கம் புலி போன்ற படங்களில் நடித்திருக்கும் திவ்யா ஸ்பந்தனா, அதிகமாக கன்னட படங்களில் நடித்துள்ளார். “பொல்லாதவன்” படத்தில் தனுசுக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் தமிழில் வரவேற்பைப் பெற்ற திவ்யா ஸ்பந்தனா அரசியலிலும் ஈடுபட்டுவந்தார். இவர் காங்கிரஸ் கட்சியில் முக்கிய பொறுப்பில் இருந்துள்ளார்.
கடந்த ஆண்டு ஜூன் மாதம் சமூகவலைத்தளங்களில் இருந்து முழுமையாக நீங்கிய திவ்யா ஸ்பந்தனா தற்போது மீண்டும் ஒரு வருடத்திற்கு பிறகு சமூக வலைத்தளத்தில் பிரவேசித்துள்ளார். நீண்ட நாட்களாக சமூக வலைத்தளத்தில் வரும்படி தனது ரசிகர்கள் கேட்டுக் கொண்டதாகவும் அதற்காக மட்டுமே தான் தற்போது சமூக வலைத்தளத்தில் மீண்டும் வந்திருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
அவர் இன்னும் நடித்துக் கொண்டும் அரசியலில் ஈடுபட்டுக் கொண்டும் தான் இருக்கிறார் என்று செய்தி வெளியாகியுள்ளது. கடந்த 2019-ம் ஆண்டு தொடங்கப்பட்ட கன்னட படமான “தில் கா ராஜா” படத்தில் இவர் நடித்திருந்ததும் அந்த படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் தற்போது நடந்து வருவதும் குறிப்பிடத்தக்கது.