மலையாள திரையுலகில் மெகா ஸ்டாரான மம்மூட்டியின் மகன் தான் துல்கர் சல்மான். 2012-ஆம் ஆண்டு தனது திரைப் பயணத்தை ‘செகண்ட் ஷோ’ எனும் படத்தின் மூலம் துவங்கிய துல்கர் சல்மான், அதன் பிறகு பல மலையாள படங்களில் நடித்தார். பின், தமிழ் திரையுலகிலும் ‘வாயை மூடி பேசவும்’ என்ற படம் மூலம் என்ட்ரியானார்.
‘வாயை மூடி பேசவும்’ படத்திற்கு பிறகு மணிரத்னமின் ‘ஓ காதல் கண்மணி’ படத்தில் நடித்தார். மலையாளம், தமிழ் மட்டுமில்லாமல் ஹிந்தியில் ‘கர்வான், தி சோயா ஃபேக்டர்’, தெலுங்கில் ‘மகாநடி’ என வாய்ப்பு கிடைக்கும் எல்லா மொழிகளிலும் தன் நடிப்பால் லைக்ஸ் குவித்து விடுகிறார் துல்கர் சல்மான்.
இந்த ஆண்டு (2020) தொடக்கத்தில் துல்கர் நடித்து ரிலீஸான தமிழ் படம் ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ மெகா ஹிட்டானது. மிகப் பெரிய ரசிகர் பட்டாளத்தை வைத்திருக்கும் துல்கர் சல்மானுக்கு இன்று (ஜூலை 28-ஆம் தேதி) பிறந்த நாளாம். தற்போது, துல்கர் சல்மான் நடிப்பில் தமிழில் ‘வான், ஹேய் சினாமிகா’ மற்றும் மலையாளத்தில் ‘குருப்’ என மூன்று படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. அன்று முதல் இன்று வரை இதுவரை யாரும் பார்த்திராத நடிகர் துல்கர் சல்மானின் ஸ்பெஷல் ஸ்டில்ஸ் இதோ…
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
41
42
43
44
45
46
47
48
49
50
51
52
53
54