அடேங்கப்பா… நடிகர் ‘ஜெயம்’ ரவியின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா?

  • November 26, 2021 / 06:01 PM IST

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் ‘ஜெயம்’ ரவி. முதல் படத்துலேயே தன் நடிப்பால் அசரடித்து, ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கினார். அந்த படம் தான் ‘ஜெயம்’. ‘ஜெயம்’ ஹிட்டானதும் ‘M.குமரன் S/O மகாலக்ஷ்மி’ என்ற படத்தில் நடித்தார். இதுவும் மிகப் பெரிய வெற்றியை பெற்றதும், ‘ஜெயம்’ ரவிக்கு அடித்தது ஜாக்பாட்.

அடுத்தடுத்து அவரின் கால்ஷீட் டைரியில் ‘தாஸ், மழை, இதயத்திருடன், உனக்கும் எனக்கும், தீபாவளி, சந்தோஷ் சுப்ரமணியம், தாம் தூம், பேராண்மை, தில்லாலங்கடி, எங்கேயும் காதல், ஆதி பகவன், நிமிர்ந்து நில், ரோமியோ ஜூலியட், தனி ஒருவன், அடங்க மறு, கோமாளி’ என படங்கள் குவிந்தது.

2009-ஆம் ஆண்டு ‘ஜெயம்’ ரவி ஆர்த்தி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இப்போது, ‘ஜெயம்’ ரவி நடிப்பில் மணிரத்னமின் ‘பொன்னியின் செல்வன்’, அஹமத்தின் ‘ஜன கண மன’, இயக்குநர் கல்யாண கிருஷ்ணனின் படம் என மூன்று படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. இந்நிலையில், நடிகர் ‘ஜெயம்’ ரவியின் சொத்து மதிப்பு ரூ.90 கோடி என தகவல் கிடைத்துள்ளது.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus