விஜய் டிவியில் ‘உலக நாயகன்’ கமல் ஹாசன் தொகுத்து வழங்கும் ‘பிக் பாஸ்’ ரியாலிட்டி ஷோவின் சீசன் 5 கடந்த அக்டோபர் 3-ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகி வருகிறது. மேலும், ‘உலக நாயகன்’ கமல் ஹாசன் நடிக்கும் புதிய படமான ‘விக்ரம்’-யின் ஷூட்டிங் பரபரப்பாக நடைபெற்று வருகிறது.
இந்த படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். சமீபத்தில், ரிலீஸ் செய்யப்பட்ட இந்த படத்தின் First Glance படத்தின் மீதான எக்ஸ்பெக்டேஷன் லெவலை எகிற வைத்தது. பொலிட்டிக்கல் ஆக்ஷன் த்ரில்லர் படமான இதில் மலையாள நடிகர் ஃபஹத் ஃபாசில், ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி, ‘கைதி’ அர்ஜுன் தாஸ் – நரேன் ஆகியோர் பவர்ஃபுல்லான வில்லன் ரோல்களில் நடிக்கின்றனர்.
இது தவிர ஷங்கரின் ‘இந்தியன் 2’, இயக்குநர் மகேஷ் நாராயணன் படம், இயக்குநர் வெற்றிமாறன் படம், இயக்குநர்.பா.இரஞ்சித் படம் என கமல் லைன் அப்பில் நான்கு படங்கள் இருக்கிறது. இந்நிலையில், கடந்த நவம்பர் 22-ஆம் தேதி கமல் ட்விட்டரில் “அமெரிக்கப் பயணம் முடிந்து திரும்பிய பின் லேசான இருமல் இருந்தது. பரிசோதனை செய்ததில் கோவிட் தொற்று உறுதியானது.
மருத்துவமனையில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். இன்னமும் நோய்ப்பரவல் நீங்கவில்லையென்பதை உணர்ந்து அனைவரும் பாதுகாப்பாக இருங்கள்” என்று கூறியிருந்தார். தற்போது, ‘கொரோனா’ தொற்றிலிருந்து மீண்டு வந்த நடிகர் கமல் ஹாசன் டிஸ்சார்ஜ் ஆகி வீட்டுக்கு சென்று விட்டார் என்று தகவல் கிடைத்துள்ளது. இது தொடர்பாக கமல் ட்விட்டரில் “முன்னெச்சரிக்கைகள் முடிந்தவரை காக்கும். அவற்றையும் மீறி சுகம் கெட்டால், நாம் எடுத்த நடவடிக்கைகளே நம்மை விரைவில் குணப்படுத்தவும் கூடும். தொற்றுத் தாக்கியும் விரைந்து மீண்டிருக்கிறேன். எத்தனை உள்ளங்கள் என்னலம் சிந்தித்தன என்றெண்ணியெண்ணி மகிழ்ந்து இருக்கிறேன்” என்று குறிப்பிட்டு ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
முன்னெச்சரிக்கைகள் முடிந்தவரை காக்கும். அவற்றையும் மீறி சுகம் கெட்டால், நாம் எடுத்த நடவடிக்கைகளே நம்மை விரைவில் குணப்படுத்தவும் கூடும். தொற்றுத் தாக்கியும் விரைந்து மீண்டிருக்கிறேன். எத்தனை உள்ளங்கள் என்னலம் சிந்தித்தன என்றெண்ணியெண்ணி மகிழ்ந்து இருக்கிறேன். pic.twitter.com/IScdLsBjOL
— Kamal Haasan (@ikamalhaasan) December 4, 2021
கொரோனா பெருந்தொற்றிலிருந்து பூரண குணமடைந்து இன்று காலை மருத்துவமனையிலிருந்து தலைவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். தனது அன்றாடக் கடமைகளை சிறப்புற ஆற்ற தயாராக உள்ளார். pic.twitter.com/nHb96hhKQ4
— Makkal Needhi Maiam | மக்கள் நீதி மய்யம் (@maiamofficial) December 4, 2021