திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ‘உலக நாயகன்’ கமல் ஹாசன்… என்ன காரணம்?

  • January 17, 2022 / 07:40 PM IST

விஜய் டிவியில் ‘உலக நாயகன்’ கமல் ஹாசன் தொகுத்து வழங்கும் ‘பிக் பாஸ்’ ரியாலிட்டி ஷோவின் சீசன் 5 கடந்த ஆண்டு (2021) அக்டோபர் 3-ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகி வந்தது. நேற்று (ஜனவரி 16-ஆம் தேதி) தான் இந்நிகழ்ச்சி முடிவடைந்தது. ‘உலக நாயகன்’ கமல் ஹாசன் நடிக்கும் புதிய படமான ‘விக்ரம்’-யின் ஷூட்டிங் பரபரப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். சமீபத்தில், ரிலீஸ் செய்யப்பட்ட இந்த படத்தின் First Glance படத்தின் மீதான எக்ஸ்பெக்டேஷன் லெவலை எகிற வைத்தது. பொலிட்டிக்கல் ஆக்ஷன் த்ரில்லர் படமான இதில் மலையாள நடிகர் ஃபஹத் ஃபாசில், ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி, ‘கைதி’ அர்ஜுன் தாஸ் – நரேன் ஆகியோர் பவர்ஃபுல்லான வில்லன் ரோல்களில் நடிக்கின்றனர். இது தவிர ஷங்கரின் ‘இந்தியன் 2’, இயக்குநர் மகேஷ் நாராயணன் படம், இயக்குநர் வெற்றிமாறன் படம், இயக்குநர்.பா.இரஞ்சித் படம் என கமல் லைன் அப்பில் நான்கு படங்கள் இருக்கிறது.

இதுமட்டுமின்றி, பிரபல OTT தளமான ‘டிஸ்னி ப்ளஸ் ஹாட் ஸ்டார்’யில் 24 மணி நேரமும் ஒளிபரப்பாகப்போகும் ‘பிக் பாஸ் அல்டிமேட்’ நிகழ்ச்சியையும் இம்மாத இறுதியில் இருந்து தொகுத்து வழங்க கமல் ஒப்பந்தமாகியிருக்கிறார். இந்நிலையில், இன்று நடிகர் கமல் ஹாசன் வழக்கமாக மேற்கொள்ளும் மருத்துவ பரிசோதனைக்காக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என தகவல் கிடைத்துள்ளது.

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus