பழம்பெரும் இயக்குநர் கே.விஸ்வநாத்தை சந்தித்த நடிகர் கமல் !

  • November 23, 2022 / 03:34 PM IST

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் வெளியாகி உள்ள படம் விக்ரம் .இந்த படத்தில் விஜய்சேதுபதி, ஃபகத் பாசில், காளிதாஸ் ஜெயராம் உள்ளிட்ட பலர் நடித்து இருந்தனர் . நடிகர் சூர்யா விக்ரம் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்து இருந்தார் . விக்ரம் படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது .

இந்நிலையில் விக்ரம் படத்தின் வெற்றிக்கு பிறகு நடிகர் கமல் தொடர்ந்து பல படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார் . அந்த வகையில் தற்போது இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கி விறுவிறுப்பாக சென்னையில் நடந்து வருகிறது . நடிகை காஜல் ,ரகுல் ப்ரீத் , ப்ரியா பவானி ஷங்கர் ஆகியோர் இந்த படங்களில் நடித்து வருகின்றனர் . லைக்கா நிறுவனத்துடன் இணைந்து உதயநிதி ஸ்டாலின் இந்த படத்தை தயாரிக்கிறார் .

மேலும் நடிகர் கமல் பிக் பாஸ் சீசன் 6 தமிழ் நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கி வருகிறார் . இன்னொரு பக்கம் தனது கட்சி பணிகளையும் தொடர்ந்து செய்து வருகிறார் . இந்நிலையில் நடிகர் கமல் தற்போது பழம்பெரும் இயக்குநர் கே.விஸ்வநாத்தை இன்று ஹைதராபாத்திலுள்ள அவரது இல்லத்தில் சந்தித்து உள்ளார் . நடிகர் கமல் மற்றும் இயக்குனர் கே.விஸ்வநாத் இருவரும் சந்தித்த புகைப்படம் வைரலாகி வருகிறது .

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus