பிரபல நடிகர் சிவக்குமாரின் மகனாகவும், நடிகர் சூர்யாவின் தம்பியாகவும் இருந்தும் திரையுலகில் தனக்கென ஒரு ஃபார்முலாவை பிடித்து ஹிட் படங்களில் நடித்து வருகிறார் கார்த்தி. அறிமுகமான முதல் படமே மிகப் பெரிய வெற்றி பெறுவது என்பது எல்லோருக்கும் அமைந்து விடாது.
ஆனால், கார்த்திக்கு அமைந்தது. அது தான் ‘பருத்திவீரன்’ படம். இந்த படத்தை இயக்குநர் அமீர் இயக்கியிருந்தார். ‘பருத்திவீரன்’ ஹிட்டிற்கு பிறகு கார்த்திக்கு அடித்தது ஜாக்பாட்.
அடுத்தடுத்து அவரின் கால்ஷீட் டைரியில் ‘ஆயிரத்தில் ஒருவன், பையா, நான் மகான் அல்ல, சிறுத்தை, மெட்ராஸ், கொம்பன், தீரன் அதிகாரம் ஒன்று, கைதி, சுல்தான், விருமன், பொன்னியின் செல்வன் (முதல் பாகம்), சர்தார்’ என படங்கள் குவிந்தது.
இப்போது கார்த்தி நடிப்பில் ‘ஜப்பான்’, ‘பொன்னியின் செல்வன் 2’, மற்றும் ‘சர்தார் 2’ என மூன்று படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. இந்நிலையில், கார்த்தியின் ஃபேஸ்புக் அக்கவுண்ட் ஹேக் செய்யப்பட்டதாக தகவல் கிடைத்துள்ளது. இதை கார்த்தியே தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் ஸ்டேட்டஸாகத் தட்டி உறுதிபடுத்தியுள்ளார்.
Hello guys, my Facebook page has been hacked. We are trying to restore it with Fb team.
— Karthi (@Karthi_Offl) November 14, 2022