வைரலாகும் நடிகர் கவினின் குடும்ப புகைப்படம் !

  • February 15, 2023 / 06:25 PM IST

நடிகர் கவின் நடிப்பில் கணேஷ் கே பாபு இயக்கத்தில் வெளியாகி உள்ள படம் ” டாடா ” . பீஸ்ட் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான அபர்ணா தாஸ் இந்த படத்தில் நாயகியாக நடித்து வருகிறார் . பாக்யராஜ் மற்றும் ஐஸ்வர்யா பாஸ்கரன் ஆகியோர் முக்கியமான பாத்திரங்களில் நடித்து உள்ளனர் .

வாரிசு மற்றும் துணிவு படத்திற்கு பிறகு வெளியான எந்த படங்களும் ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் வரவேற்பை பெறவில்லை என்று தான் சொல்ல வேண்டும் . இந்த நிலையில் வித்தியாசமான கதைக்களத்துடன் வெளியான டாடா ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது .

இந்நிலையில் கவின் தனது அம்மாவுடன் எடுத்துக்கொண்ட அழகிய குடும்ப புகைப்படம் ஒன்று தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus