OTTயில் வெளியாகவுள்ள நடிகர் மாதவன் திரைப்படம்!

  • September 17, 2020 / 03:27 PM IST

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான மாதவன் நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத்துடன் இணைந்து “மாறா” என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இந்த வருடத்தின் தொடக்கத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது. சமீபத்தில் இந்த திரைப்பட குழு இந்த படத்தின் படப்பிடிப்பு காட்சிகள் முடிந்துள்ளதாகவும் போஸ்ட் புரொடக்ஷன் மற்றும் டப்பிங் வேலைகள் விரைவில் முடிக்கப்பட்டு இந்த படம் வெளியிடப்படும் என்றும் செய்தி வெளியிட்டுருந்தார்கள்.

இதையடுத்து தற்போது புதிய தகவல் என்னவென்றால் இந்த படத்தை OTTயில் வெளியிட முடிவு செய்துள்ளார்களாம். ஆனால் எப்போது இந்த படம் வெளியாகும் என்பதற்கான அதிகாரபூர்வமான தகவல் இன்னும் வெளியாகவில்லை.

பிரமோத் பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தில் மாதவன் மற்றும் ஷ்ரத்தா ஸ்ரீநாத் இவர்களுடன் சிவாதா நாயர், stand-up காமடியன் அலெக்சாண்டர் பாபு மற்றும் மவுலி உள்ளிட்ட நடித்துள்ளார்கள்.

மலையாளத்தில் சூப்பர் ஹிட்டான சார்லி திரைப்படத்தின் தமிழ் ரீமேக்தான் மாறா திரைப்படம். இந்தப் படத்தில் மாதவன் 40 வயது கொண்ட ஒருவராகவும் ஷ்ரத்தா ஸ்ரீநாத் இருபது வயது கொண்ட துறுதுறு பெண்ணாகவும் நடித்துள்ளார்களாம்.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus