இதுவரை யாரும் பார்த்திராத மாதவனின் அரிய புகைப்பட தொகுப்பு!

  • June 1, 2021 / 07:32 PM IST

சினிமாவில் பாப்புலர் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் மாதவன். இவருக்கு தமிழில் அமைந்த முதல் படமே மெகா ஹிட்டானதுடன் மிகப் பெரிய ரசிகர் பட்டாளத்தையும் உருவாக்கி கொடுத்தது. அந்த படம் தான் ‘அலைபாயுதே’. அதன் இயக்குநர் மணிரத்னம். ‘அலைபாயுதே’ படத்தின் ஹிட்டிற்கு பிறகு நடிகர் மாதவனுக்கு அடித்தது ஜாக்பாட்.

அடுத்தடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் ‘என்னவளே, மின்னலே, டும் டும் டும், பார்த்தாலே பரவசம், கன்னத்தில் முத்தமிட்டால், ரன், அன்பே சிவம், நள தமயந்தி, லேசா லேசா, ப்ரியமான தோழி, ஜே ஜே, எதிரி, ஆய்த எழுத்து, பிரியசகி, தம்பி, இரண்டு, ஆர்யா, எவனோ ஒருவன், வாழ்த்துகள், யாவரும் நலம், குரு என் ஆளு, மன்மதன் அம்பு, வேட்டை, இறுதிச்சுற்று, விக்ரம் வேதா, சைலன்ஸ், மாறா’ என தமிழ் படங்கள் குவிந்தது. மாதவன் தமிழ் மொழி படங்கள் மட்டுமில்லாமல் ஹிந்தி, ஆங்கிலம், கன்னடம், மலையாளம் ஆகிய மொழி படங்களிலும் நடித்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கியிருக்கிறார்.

இப்போது, மாதவன் ஹீரோவாக நடித்து, தயாரித்து, இயக்கி கொண்டிருக்கும் படம் ‘ராக்கெட்ரி : தி நம்பி எஃபெக்ட்’. ஆங்கிலம், ஹிந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என ஆறு மொழிகளில் உருவாகி கொண்டிருக்கும் இந்த படத்துக்கான இறுதிக்கட்ட வேலைகள் முடிவடையும் தருவாயில் இருக்கிறதாம். இந்நிலையில், இன்று (ஜூன் 1-ஆம் தேதி) நடிகர் மாதவனின் பிறந்த நாள் என்பதால் திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும் இவருக்கு சமூக வலைத்தளங்களில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அன்று முதல் இன்று வரை இதுவரை யாரும் பார்த்திராத நடிகர் மாதவனின் ஸ்பெஷல் ஸ்டில்ஸ் இதோ…

1

2

3

4

5

6

7

8

9

10

11

12

13

14

15

16

17

18

19

20

21

22

23

24

25

26

27

28

29

30

31

32

33

34

35

36

37

38

39

40

41

42

43

44

45

46

47

48

49

50

51

52

53

54

55

56

57

58

59

60

61

62

63

64

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus