கமலின் ‘விக்ரம்’ படத்தை பார்த்துட்டு நடிகர் மகேஷ் பாபு என்ன சொன்னார் தெரியுமா?

  • July 4, 2022 / 01:16 PM IST

சினிமாவில் டாப் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் ‘உலக நாயகன்’ கமல் ஹாசன். இவர் நடிப்பில் ஷங்கரின் ‘இந்தியன் 2’, லோகேஷ் கனகராஜின் ‘விக்ரம்’ மற்றும் இயக்குநர் பா.இரஞ்சித் படம் என மூன்று படங்கள் லைன் அப்பில் இருந்தது. இதில் ஆக்ஷன் த்ரில்லர் படமான ‘விக்ரம்’ கடந்த ஜூன் 3-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸானது.

இதில் ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி, செம்பன் வினோத் ஜோஸ் இருவரும் வில்லன் ரோல்களில் நடித்துள்ளார்கள். மேலும், மலையாள நடிகர் ஃபஹத் ஃபாசில், நரேன், காளிதாஸ் ஜெயராம், அர்ஜுன் தாஸ், மைனா நந்தினி, ஜாஃபர் சாதிக், ஷிவானி நாராயணன் ஆகியோர் முக்கிய ரோல்களில் நடித்துள்ளனர்.

கெஸ்ட் ரோலில் டாப் ஹீரோக்களில் ஒருவரான சூர்யா நடித்துள்ளார். டாப் இசையமைப்பாளர்களில் ஒருவரான அனிருத் இசையமைத்துள்ள இந்த படத்துக்கு கிரீஸ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

தற்போது, இப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், இப்படத்தை பார்த்து ரசித்த முன்னணி தெலுங்கு நடிகர் மகேஷ் பாபு ட்விட்டரில் ‘விக்ரம்’ படக்குழுவினரை பாராட்டி ஸ்டேட்டஸ் போட்டுள்ளார்.

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus