சினிமாவில் டாப் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் மோகன் லால். இவருக்கு அமைந்த முதல் மலையாள படமே சூப்பர் ஹிட்டானது. அது தான் ‘மஞ்சில் விரிஞ்ச பூக்கள்’. இந்த படத்தை இயக்குநர் பாசில் இயக்கியிருந்தார். இந்த படத்துக்கு பிறகு மலையாள மொழியில் பல படங்களில் நடித்தார். பின், 1997-ஆம் ஆண்டு வெளியான ‘இருவர்’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் என்ட்ரியானார்.
இந்த படத்தை பிரபல இயக்குநர் மணிரத்னம் இயக்கியிருந்தார். ‘இருவர்’ படத்துக்கு பிறகு நடிகர் மோகன் லாலுக்கு அடித்தது ஜாக்பாட். அடுத்தடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் ‘பாப் கார்ன், உன்னைப்போல் ஒருவன், ஜில்லா, காப்பான்’ என தமிழ் படங்கள் குவிந்தது. இது தவிர ‘சிறைச்சாலை, அரண்’ போன்ற படங்கள் மலையாளத்தில் எடுக்கப்பட்டு தமிழ் மொழியில் டப் செய்யப்பட்டு வெளியானது.
மோகன் லால் மலையாளம் மற்றும் தமிழ் மொழி படங்கள் மட்டுமில்லாமல் ஹிந்தி, தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழி படங்களிலும் நடித்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கியிருக்கிறார். இப்போது, மோகன் லால் நடிப்பில் எட்டு மலையாள படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. இந்நிலையில், நடிகர் மோகன் லாலின் சொத்து மதிப்பு ரூ.314 கோடி என தகவல் கிடைத்துள்ளது.