‘கொரோனா’ பாதிப்பு… நடிகரும், சினிமா விமர்சகருமான வெங்கட் சுபா காலமானார்!
May 29, 2021 / 11:14 AM IST
|Follow Us
சமீப காலமாக தொடர்ச்சியான மரணங்கள் ரசிகர்களுக்கும், திரையுலகினருக்கும் அதிர்ச்சியைத் தருகிறது. பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம், பிரபல காமெடி நடிகர்கள் விவேக் – பாண்டு – நெல்லை சிவா – மாறன், பிரபல இயக்குநர்கள் எஸ்.பி.ஜனநாதன் – தாமிரா, பிரபல ஒளிப்பதிவாளரும், இயக்குநருமான கே.வி.ஆனந்த் என ரசிகர்களுக்கும், திரையுலக பிரபலங்களுக்குமே பிடித்தமான நபர்களின் இழப்பு அதிர்ச்சியளிக்கிறது.
இந்த சூழலில் இன்னொரு மரணச் செய்தி வந்திருக்கிறது. பல திரைப்படங்கள் மற்றும் டிவி சீரியல்களில் நடித்தவர் பிரபல நடிகர் வெங்கட் சுபா. இவர் யூ டியூபில் ‘டூரிங் டாக்கீஸ்’ என்ற சேனலில் நடிகர் சித்ரா லக்ஷ்மணனுடன் இணைந்து தினமும் பல சுவாரஸ்யமான சினிமா செய்திகளை சொல்லி வந்தார்.
மேலும், அதே சேனலில் திரைப்படங்களுக்கு விமர்சனமும் செய்து வந்தார் வெங்கட் சுபா. இந்நிலையில், கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நடிகர் வெங்கட் சுபா, இன்று சிகிச்சை பலனின்றி இயற்கை எய்தினார் என்று தகவல் கிடைத்துள்ளது. இவரது மறைவுக்கு திரையுலகினர் பலர் சமூக வலைத்தளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.