தமிழ் திரையுலகில் பல கதாநாயகர்கள் முன்னணியில் இருந்து வந்தார்கள், அப்படி 90களில் தனக்கென தனி இடத்தை பிடித்தவர் நடிகர் நெப்போலியன்.
1991 ம் வருடம் வெளிவந்த “புதுநெல்லுபுதுநாத்து” படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் நெப்போலியன். பிறகு சீவலப்பேரி பாண்டி, கிழக்கு சீமையிலே, கரிசல் காட்டு பூவே, எட்டுப்பட்டி ராசா ஆகிய படங்களில் நடித்து ரசிகர்களிடையே நீங்காத இடத்தைப் பிடித்தார்.
இதைத் தொடர்ந்து பல படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்த இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் நடித்துள்ளார். பின் லனது குடும்பத்துடன் டெனஸ்ஸேவில் குடியேறிய இவர் ஹாலிவுட் படங்களில் நடிக்கத் தொடங்கினார். 2019ஆம் ஆண்டு வெளிவந்த “கிறிஸ்மஸ் கூப்பன்” என்ற படத்தில் ‘ஏஜன்ட் குமார்’ என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
ஷாம் லோகன் கலேகி என்ற ஹாலிவுட் இயக்குனரின் இயக்கத்தில் நெப்போலியன் “டேவிள்ஸ் நைட்: டான் ஆப் த நைன் ரோஜ்” நெப்போலியன் தற்போது நடித்துள்ளார். இந்தப்படம் கொரோனா லாக்டவுன் காரணமாக திரையரங்கில் வெளியிடப்பட முடியாமல் தற்போது ஓடிடி யில் வெளியாகும் என்று திரைப்படக் குழு அறிவித்துள்ளது.
இது இந்தியாவிலும் காணும்படி ஓடிடி தளத்தில் வெளியாகும் என்று ஒரு ஜூம் காலில் பேசும்போது நெப்போலியன் தெரிவித்திருக்கிறார்.
மேலும் இவர் “வல்லவனுக்கும் வல்லவன்” மற்றும் “சுல்தான்” ஆகிய தமிழ் படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இதைத்தொடர்ந்து “ட்ராப் சிட்டி” என்ற ஹாலிவுட் படத்திலும் நடித்து வருகிறாராம்.
மேலும் இந்த நேர்காணலின் போது நெப்போலியன் விஜய் படங்களை தான் காண்பதில்லை என்றும், அதற்கு காரணம் “போக்கிரி” படத்தில் இவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு தான் என்றும் ஒரு கூடுதல் தகவலை தெரிவித்திருக்கிறார்.