சமீப காலமாக தொடர்ச்சியான மரணங்கள் ரசிகர்களுக்கும், திரையுலகினருக்கும் அதிர்ச்சியைத் தருகிறது. பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம், பிரபல காமெடி நடிகர்கள் விவேக் – பாண்டு – நெல்லை சிவா – மாறன், பிரபல இயக்குநர்கள் எஸ்.பி.ஜனநாதன் – தாமிரா, பிரபல ஒளிப்பதிவாளரும், இயக்குநருமான கே.வி.ஆனந்த் என ரசிகர்களுக்கும், திரையுலக பிரபலங்களுக்குமே பிடித்தமான நபர்களின் இழப்பு அதிர்ச்சியளிக்கிறது.
இந்த சூழலில் இன்னொரு மரணச் செய்தி வந்திருக்கிறது. சினிமாவில் பிரபல நடிகர்களில் ஒருவராக வலம் வந்தவர் நெடுமுடி வேணு. இவர் தமிழில் ‘உலக நாயகன்’ கமல் ஹாசனின் ‘இந்தியன்’, விக்ரமின் ‘அந்நியன்’, கார்த்திக் குமாரின் ‘பொய் சொல்ல போறோம்’, சிலம்பரசனின் ‘சிலம்பாட்டம்’, ஜி.வி.பிரகாஷ் குமாரின் ‘சர்வம் தாளமயம்’ ஆகிய படங்களில் நடித்திருக்கிறார்.
நடிகர் நெடுமுடி வேணு தமிழ் மொழி படங்கள் மட்டுமில்லாமல் மலையாளத்தில் 500 படங்களுக்கு மேல் நடித்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கியிருக்கிறார். தற்போது, நடிகர் நெடுமுடி வேணு உடல்நலக்குறைவால் இயற்கை எய்தினார் என தகவல் கிடைத்துள்ளது. இவரது மறைவுக்கு திரையுலகினர் பலர் சமூக வலைத்தளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
#nedumudivenu was a legend, but every role he got into, he would try and get under the skin of the character, for Vembu iyer in #sarvanthaalamayam , he met #umayalpuramsivaraman spent time,jammed with him and he just got it right, Venusir was kind, generous and talented. Missyou! pic.twitter.com/MQyQplsAzW
— Rajiv Menon (@DirRajivMenon) October 11, 2021
The legend is no more … Rest In Peace #NedumudiVenu sir . a kind person and a great teacher . Will miss u sir pic.twitter.com/rxSmfimQeY
— G.V.Prakash Kumar (@gvprakash) October 11, 2021
Farewell Venu uncle! Your body of work and your expertise over the craft will forever be research material for generations to come! Rest in peace legend! #NedumudiVenu pic.twitter.com/VzZ4LF49Nq
— Prithviraj Sukumaran (@PrithviOfficial) October 11, 2021
Deeply saddened to hear about the demise of a great legendary actor #NedumudiVenu Sir. Not only was he a great actor but also a wonderful human being. Had the honor of my husband directing him in one of his films. Will miss him. May his soul rest in peace. #RIP 🙏🙏🙏🙏🙏 pic.twitter.com/twCUKWkzgc
— KhushbuSundar (@khushsundar) October 11, 2021