“என்னோட ஃபேஸ்புக் அக்கவுண்டை ஹேக் பண்ணிட்டாங்க”… ரசிகர்களை உஷார்படுத்திய நடிகர் பிரபாஸ்!

  • July 28, 2023 / 06:34 PM IST

சினிமாவில் டாப் நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் பிரபாஸ். 2002-ஆம் ஆண்டு தெலுங்கு திரையுலகில் வெளியான படம் ‘ஈஸ்வர்’. இது தான் பிரபாஸ் ஹீரோவாக அறிமுகமான முதல் படமாம். இந்த படத்தை இயக்குநர் ஜெயந்த்.சி.பரஞ்சீ இயக்கியிருந்தார். இதன் பிறகு ‘ராகவேந்திரா, வர்ஷம்’ என இரண்டு படங்கள் வெளியானது.

இதில் ‘வர்ஷம்’ மிகப் பெரிய ஹிட்டானதால் பிரபாஸிற்கு அடித்தது ஜாக்பாட். அடுத்தடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் ‘அடவி ராமுடு, சக்ரம், சத்ரபதி, பௌர்ணமி, யோகி, முன்னா, புஜ்ஜிகாடு, பில்லா, ஏக் நிரஞ்சன், டார்லிங், மிஸ்டர் பெர்ஃபெக்ட், ரிபெல், மிர்ச்சி, பாகுபலி 1 & 2, சாஹோ, ராதே ஷ்யாம், ஆதிபுருஷ்’ என படங்கள் குவிந்தது.

இதில் ‘பாகுபலி 1 & 2’ வெளியான அனைத்து மொழிகளிலும் ஹிட்டாகி பிரபாஸின் கேரியரில் மிகப் பெரிய ஹைலைட்டாக அமைந்தது. இப்போது பிரபாஸ் நடிப்பில் ‘கல்கி 2898 AD’, ‘சலார்’, ‘ஸ்பிரிட்’ என மூன்று படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. இந்நிலையில், பிரபாஸின் ஃபேஸ்புக் அக்கவுண்ட் ஹேக் செய்யப்பட்டதாக தகவல் கிடைத்துள்ளது. இதை அவரே தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்டேட்டஸாகத் தட்டி உறுதிபடுத்தியுள்ளார்.

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus