முன்னணி நடிகர்களில் ஒருவரான பிரபாஸ் நடிப்பில் இப்போது ‘ராதே ஷ்யாம்’, இயக்குநர் நாக் அஷ்வின் படம், ‘ஆதிபுருஷ்’, ‘சலார்’ என நான்கு படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. இதில் ‘ஆதிபுருஷ்’, நடிகர் பிரபாஸின் கேரியரில் 22-வது படமாம். இப்படத்தை ‘தன்ஹாஜி : தி அன்சங் வாரியர்’ எனும் ஹிந்தி பட புகழ் இயக்குநர் ஓம் ராவத் இயக்குகிறாராம்.
இதில் பவர்ஃபுல்லான வில்லன் ரோலில் பாலிவுட் நடிகர் சயிஃப் அலிகான் நடிக்க உள்ளார். இப்படம் தெலுங்கு, ஹிந்தி, தமிழ், கன்னடம், மலையாளம் என ஐந்து மொழிகளில் உருவாகவிருக்கிறது. இதனை ‘டி-சீரிஸ்’ மற்றும் ‘ரெட்ரோபைல்ஸ்’ ஆகிய நிறுவனங்கள் இணைந்து மிக பிரம்மாண்டமாக தயாரிக்கிறது.
கடந்த ஜனவரி 19-ஆம் தேதி இந்த படத்தின் மோஷன் கேப்ச்சருக்கான பணி ஆரம்பிக்கப்பட்டது. தற்போது, இன்று (பிப்ரவரி 2-ஆம் தேதி) முதல் படத்தின் ஷூட்டிங் பூஜையுடன் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. படத்தை அடுத்த ஆண்டு (2022) ஆகஸ்ட் 11-ஆம் தேதி ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளனர். இப்படம் 3டி தொழில்நுட்பத்தில் தயாராகப்போவது குறிப்பிடத்தக்கது.
#Adipurush aarambh.
#Prabhas #SaifAliKhan @omraut #BhushanKumar @vfxwaala @rajeshnair06 @retrophiles1 #TSeries pic.twitter.com/TxidcBFj2c— T-Series (@TSeries) February 2, 2021