நடிகர் பிரகாஷ்ராஜின் குரல் கொடுத்திருக்கும் முதல் ஆடியோ புக்..!
June 11, 2020 / 08:02 PM IST
|Follow Us
பிரபல திரைப்பட நடிகர் மற்றும் இயக்குனரான பிரகாஷ் ராஜ் , தற்போது ஒரு புத்தகத்திற்கு வாய்ஸ் ஓவர் கொடுத்துள்ளார். இந்த ஆடியோ புத்தகம் ஒரு ஸ்வீடன் சார்ந்த ஆப்பில் வெளியாகி உள்ளது. இந்த புத்தகம் “நம் காலத்து கதையை கொண்டுள்ளது” என்று நடிகர் பிரகாஷ்ராஜ் தெரிவித்துள்ளார்.
“த லிட்டில் டாக் கேர்ள்” என்று பெயரிடப்பட்டுள்ள இந்த புத்தகத்தை பிரபல எழுத்தாளர் அனிதா நாயர் எழுதியுள்ளார். இந்த புத்தகம் மத ரீதியான அரசியல் பற்றிய கருத்தை கொண்டுள்ளதாக எழுதப்பட்டுள்ளது.
அந்த நாட்டின் தற்போதைய நிலைமையும் , இங்கு வாழும் மக்கள் தங்களின் நிலையை எவ்வாறு புரிந்து கொள்ள வேண்டும் என்பது பற்றியும் இந்த புத்தகத்தில் வரும் ஒரு ” டாக் கேர்ள்” என்ற கதாபாத்திரம் மூலம் எடுத்துரைக்கப்பட்டுள்ளது.
இந்த புத்தகத்தைப் பற்றி நடிகர் பிரகாஷ்ராஜ் கூறியதாவது “இந்த புத்தகத்தில் உள்ள கதை நம் அன்றாட வாழ்வியல் பற்றிய கதையாகும் , அதுவே என்னை இந்த புத்தகத்திற்கு குரல் கொடுக்க ஆர்வத்தையும் உற்சாகத்தையும் தந்தது. எழுத்தாளர் ஒரு இருண்ட பாதையில் நீங்கள் நடக்கிறீர்கள் என்று குறிப்பிட்டுருந்தால் அதை நம் வாழ்வோடு ஒப்பிட்டு பார்க்க வேண்டும் ,நாம் நடந்த இருண்ட பாதைகளை நினைவு கூறவேண்டும். ஒரு கதையைப் படித்து அதை மற்றவர் கண்ணால் பார்ப்பதை விட நம் கண்ணிலிருந்து பார்ப்பதே அந்த கதையை நாம் மேலும் உணர்வதற்கான வாய்ப்பளிக்கும். இந்த காரணத்தால் இந்த புத்தகம் என் மனதுக்கு மிகவும் நெருக்கமான புத்தகமாக மாறியுள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த புத்தகத்தின் எழுத்தாளர் அனிதா நாயர் கதையை பற்றி கூறுகையில் “சிட்டிசன் அமெண்ட்மெண்ட் ஆக்ட் (CAA), நாடு முழுவதும் சர்ச்சையை எழுப்பிய சமயத்தில் , இதனால் எந்த பாதிப்பும் ஏற்படாத என் கண் பார்வையிலிருந்து இந்த கதையை எழுதி உள்ளேன். இந்த கதையில் ‘மாஷ் ‘என்று அழைக்கப்படும் ஸ்ரீராமன் கேரள மாநிலத்தில் உள்ள ஒரு கிராமத்தில் வசித்து வருவான், அவன் வாழ்க்கையில் அந்த ‘டாக் கேர்ள் ‘ஏற்படுத்திய பாதிப்புகளே இந்த கதையின் கருவாகும்” என்றிருக்கிறார்.
மேலும் அவர் இந்த கதையை எழுதிய போதே இதற்கு பிரகாஷ் ராஜ் தான் குரல் கொடுத்தால் நன்றாக இருக்கும் என்பதை தீர்மானித்து விட்டேன், அதேபோல் அவர் குரலில் இது வெளியாவது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்துள்ளது என்று குறிப்பிட்டிருக்கிறார்.