ரேடியோ ஜாக்கியாக இருந்து பின்பு தமிழ் சினிமாவில் கால் பதித்தவர் குணச்சித்திர நடிகரான ரமேஷ் திலக். தன் நகைச்சுவையான பேச்சாலும் நடிப்பாலும் தமிழ் சினிமாவில் தனக்கென தனி இடத்தை பிடித்திருக்கிறார்.
இவர் தமிழ் மட்டுமில்லாது மலையாள படங்களிலும் நடித்துள்ளார். ரேடியோ ஜாக்கியாக இருந்து பின்பு சின்னத்திரையில் நடிகராகி அதிலிருந்து 2013 ஆம் ஆண்டு வெளியான “சூது கவ்வும்” படத்தின் மூலம் திரையுலகில் தனக்கென தனி இடத்தை தக்கவைத்துக் கொண்டார்.
இந்த படத்தை தொடர்ந்து நேரம், வாயை மூடி பேசவும், டிமான்டி காலனி, காக்கா முட்டை, வேதாளம், காதலும் கடந்து போகும், ஒரு நாள் கூத்து, கபாலி, காலா, விஸ்வாசம் என்று பல முன்னணி நட்சத்திரங்களின் வெற்றி படங்களில் நடித்துள்ளார்.
தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளிவரவிருக்கும் “மாஸ்டர்” திரைப்படத்தில் ரமேஷ் திலக் நடித்துள்ளார்.
இந்நிலையில் நடிகர் ரமேஷ் திலக் சமூகவலைத்தளங்களில் தனக்கு ஆண் குழந்தை பிறந்திருப்பதை மகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளார். இதுகுறித்து அவர் தனக்கு தலைவன் பிறந்திருக்கிறான் என்று பதிவிட்டுள்ளார்.
எனக்கு ஒரு #தலைவன் பிறந்து இருக்கிறான்❤️ pic.twitter.com/SZ5bbeRvul
— Ramesh Thilak (@thilak_ramesh) July 30, 2020
இவர் கடந்த 2018 ஆம் ஆண்டு ஆர்ஜே நவலட்சுமியை திருமணம் செய்துகொண்டார். இவர் பிரபல ஸ்டண்ட் மாஸ்டரான ராம்போ ராஜ்குமாரின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்த ஜோடிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.
Attachments area